செய்திகள் சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:39

விருதுநகர்: வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் உள்தர மேம்பாட்டு உத்திரவாத அமைப்பு சார்பில் ஐந்து நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பரணி வரவேற்றார். முதல்வர் மீனாராணி , திருச்சி ஜோசப் கல்லுாரி உதவி பேராசிரியர் விமல் ஜெரால்டு டிஜிட்டல் பேசினர். உதவி பேராசிரியர் ஷர்மிலி நன்றி கூறினார்.

.............ஆர்ப்பாட்டம்ராஜபாளையம்: ரயில்வே ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் மிஸ்ராவின் அலைபேசியை ஒட்டு கேட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் தென்னக ரயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.............தடுப்பூசி முகாம்சத்திரப்பட்டி: அக் ஷயா அரிமா சங்கம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. தலைவர் முத்துக்குரு பாக்கியம் தலைமை வகித்தார். ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,ரகுராமன் துவங்கி வைத்தார். 185 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. எஸ்.ஐ., ஆனந்தஜோதி, புதுத்தெரு இளைஞர்மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.............'சர்ச்'களை பழுதுபார்க்க நிதிவிருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி: சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ 'சர்ச்'களில் பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதி உதவி வழங்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. www.bcmbcmw@tn.gov.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆவணங்களுடன் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட குழு ஆய்வு செய்து இரு தவணைகளாக சர்ச் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். விவரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம், என்றார்...............சொட்டுநீர் பாசனத்திற்கு ரூ.10 கோடிவிருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி: பிரதமரின் சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுாறு சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. 2021--22 நிதியாண்டில் மாவட்டத்திற்கு 1668 எக்டேர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.10 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் http://tnhorticulture.tn.gov.in ல் பதிவு செய்து தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம், என்றார். ......................பத்ம விருதுக்கு அழைப்புவிருதுநகர்: கலெக்டர் மேகநாதரெட்டி: 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜன. 26 குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமுக சேவை, வியாபாரம் துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிப்போர் தேசிய விருதோ, மானிய விருதோ பெற்றிருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள்http://padmaawards.gov.inல் ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்...............காத்திருப்பு போராட்டம்சாத்துார்: அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்த , காயமடைந்த தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் வழங்கிய நிவாரண காசோலை பணமின்றி திரும்பி வந்தது. உரிய இழப்பீடு பெற்றுத்தரக்கோரி தொழிலாளர்கள் குடும்பத்தினர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் வெங்கடேஷ் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X