வளங்கள் இருக்கு... வாய்ப்பு இல்லை; தொழில் வளத்துக்காக ஏங்கும் காரியாபட்டி மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 ஜூலை
2021
08:57
பதிவு செய்த நாள்
ஜூலை 27,2021 05:40

காரியாபட்டி-நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி. இங்கு விவசாயம் பிரதான தொழில். கடந்த 30 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது.



விவசாயம் செய்யமுடியாமல் விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறின. தற்போது எங்கு பார்த்தாலும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து அடர்ந்த காடுகளாக உள்ளன. இப்பகுதியில் மாற்றுத் தொழில் எதுவும் கிடையாது. பிழைப்புக்காக கிராம விவசாயிகள் திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்துள்ளதால் எத்தனையோ குக்கிராமங்கள் காணாமல் போய்விட்டன. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விட்டனர்.



இதற்கெல்லாம் முக்கிய காரணம் இப்பகுதியில் வேலைவாய்ப்புக்கான முகாந்திரம் இல்லாததே. விருதுநகர் மாவட்டத்தில் வறட்சியான பகுதியாக நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி பகுதிகள் உள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் தொழில் தொடங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. மாறாக மருத்துவ கழிவுகள், சாயப்பட்டறை உள்ளிட்ட ஆலைகளை துவக்குவதற்கு முனைப்பு காட்டுகின்றனர். ஏற்கனவே வறட்சிப் பகுதியாக இருக்கும் நிலையில் கொஞ்ச, நஞ்ச இயற்கை வளங்களையும் காலி செய்ய முற்படுகின்றனர். இது போன்ற ஆலைகள் ஆபத்தானவை என இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.இயற்கை வளங்கள் பாதிக்காத அளவிற்கு தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.



இதில் காரியாபட்டி வளர்ந்துவரும் ஊர்களில் ஒன்றாக உள்ளது. நகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்து உள்ள இப்பகுதி வறட்சியான இருந்தாலும் இயற்கை வளங்கள் அதிகம் கொட்டி கிடக்கின்றன. இவற்றை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார்போல் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202103:38:09 IST Report Abuse
ராஜா நன்றி தினமலர். கரியப்பட்டி அருகில் தான் நான் வளர்ந்தேன். இங்கு பெரும்பாலான பகுதிகளில் சீமை கருவேலம் முளைத்து நீர் வளம் இல்லாமல் போய் விட்டது. அவைகளை ஒழிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்தப்பகுதி பாலைவன நிலைக்கு தள்ளப்பட்டு விடும். இங்கிருக்கும் தொழில் நிறுவனங்களும் ஏனோ ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. அதை தடுத்து மேலும் பல பெரிய நிறுவனங்கள் தொடங்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு வேளை விருதுநகர் தொலைவில் உள்ளதால் முக்கியத்துவம் தரப்படாமலும் இருக்க வாய்ப்புண்டு. மேலும் காரியாபட்டி தங்கம் தென்னரசு தொகுதி, தமிழச்சி தங்கபண்டியனின் ஊர். ஆனால், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தந்த ஊரின் தற்போதைய அவல நிலை இது தான். காரியாபட்டி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள். மதுரை மல்லி எனப்படுவது காரியாபட்டியில் விளைவது தான். அதன் வாசனையே அலாதியானது. மேலும், காரியாபட்டி வாழை நாரில் கோர்த்த முருக்கும், சேவும் தனிச் சுவை வாய்ந்தது.
Rate this:
Cancel
27-ஜூலை-202123:50:07 IST Report Abuse
அப்புசாமி இயற்கையை பாதிக்காத எந்தத் தொழிலும் செய்ய முடியாது. விவசாயம் தவிர. ஏதாவது ஆரம்பிச்சா, உடனே இயற்கை வளங்களை சுரண்டறாங்கன்னு ரெண்டு முய்ணு க்ரூப்புகள் கெளம்பிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X