துவங்கியது மாஸ்கிளீனிங் : விருதுநகரில் கலெக்டர் துவக்கினார் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
துவங்கியது மாஸ்கிளீனிங் : விருதுநகரில் கலெக்டர் துவக்கினார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:41

விருதுநகர்-விருதுநகர் மாவட்டத்தில் மாதம் தோறும் 26 முதல் 29 வரை மாஸ் கிளீனிங் நடக்க உள்ள நிலையில், இதன் பணியினை விருதுநகரில் கலெக்டர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்



.விருதுநகர் நகராட்சி 3வது வார்டு, சிவஞானபுரம் ஊராட்சியில் மாஸ் கிளீனிங் பணிகளை துவக்கிவைத்த அவர் கூறியதாவது: மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மாஸ் கிளீனிங் செய்ய திட்டமிட்டுள்ளோம். மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட்கள், பொது சுகாதார வளாகங்கள், மார்க்கெட்கள், குப்பை அதிகம் சேகரமாகும் இடங்கள், நீர் நிலை பகுதிகளில் மாஸ் கிளீனிங் நடக்கும். சுகாதாரத்துறையால் கண்டறியப்பட்ட 'ஹை ரிஸ்க்' இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுத்தம் செய்யப்படும். சிறப்பாக செயல்படும் உள்ளாட்சி அமைப்பின் துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர், என்றார்.திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன், நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரி, செயற்பொறியாளர் சக்திமுருகன.ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X