கடலோர கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்... கிடைக்குமா? திட்டம் நிறைவேற்றி 4 ஆண்டுகளாகியும் சப்ளை இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:41

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கி 4 ஆண்டுகளை கடந்தும் பல கடலோர கிராமங்களுக்கும் இது வரை குடிநீர் விநியோகம் செய்யவில்லை.



கடலுார் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வறட்சி காரணமாக நிலத்தடி நீர் ஆண்டுதோறும் இறங்கி வருகிறது. மாவட்டத்தில் நெய்வேலியில் நிலத்தடியில் அதிக தண்ணீரை வெளியேற்றி வருவதால் உள்பகுதியில் வெற்றிடத்திற்கு கடல் நீர் உட்புகுந்து வருகிறது. கடலுார் அடுத்த சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் அதிக நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் பற்றாக்குறை ஏற்படுகிறது.



பயன்படுத்திய தண்ணீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் மஞ்சளாக மாறியது. இதனால் சிப்காட் தொழிற்சாலைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் தண்ணீர் விலைக்கு வழங்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. கடலுார் மாவட்ட கடலோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்க கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.



கடலோரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, புவனகிரி, முட்லுார், கடலுார் உட்பட 812 கிராமங்களை இணைக்க ரூ. 256 கோடி மதிப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம். சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ஓடும் ஊற்றெடுத்து ஓடும் தண்ணீரை சேகரித்து குடிநீராக பயன்படுத்தப்படுகிறது.கொள்ளிடம் அருகே உள்ள எய்யலுார், குச்சிப்பாளையம், ஆச்சாள்புரம், சிறுகாட்டூர் கிராமங்களில் கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீரை பம்ப் செய்து கடலுார் நகரம் வரை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் மொத்தமுள்ள 97 கி.மீ., துாரத்திற்கு பைப் லைன்கள் போடப்பட்டுள்ளன.



கடந்த ஆண்டு கடலுாரில் நடந்த 16.8.2017 ம் ஆண்டு கடலுாரில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவின் போது அப்போதைய முதல்வர் பழனிசாமி கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார். அன்று முதல் கடலுார் நகரத்திற்கு மட்டும் ஓரளவு குடிநீர் சப்ளை ஆகிறது. பரங்கிப்பேட்டை உட்பட பல கடலோர கிராமங்களில் இன்னும் சப்ளை செய்யவில்லை. திட்டம் துவங்கி 4 ஆண்டுகளை கடந்தும் இது வரை கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் வழங்கவில்லை.



குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தில் 812 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். இது வரை 725 கிராமங்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் நகாய் திட்ட பணி நடப்பதால் குடிநீர் பைப் இணைப்பு தரவில்லை. தற்போது தினசரி 16.2 மில்லியன் லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது. கிராமங்களுக்கு தேவையான முழு அளவு குடிநீரையும் நாங்கள் வழங்குவதில்லை.



ஒருவருக்கு 20 லிட்டர் என கணக்கிட்டு ஒரு குறிப்பிட்ட அளவு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நகாய் பணி முடிந்த பிறகு அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படும் என்றார்.கடலோர கிராமங்களுக்கு நல்ல குடிநீர் விநியோகிக்க கொண்டு வந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் தாமதம் செய்வதால் கிராம மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூலை-202101:40:58 IST Report Abuse
அப்புசாமி கொஞ்சம் பொறுங்க. பிரதமர், கட்காரி முயற்சியால் கோதாவரி தண்ணிக்கி அடிக்கல் நாட்டுன 6 மாசத்திலே உங்க வூட்டு க்கு பைப் போட்டு தண்ணீர் கிடைக்கப் போகுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X