இரண்டாம் நிலைக் காவலர் உடல் தகுதி தேர்வு துவக்கம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
இரண்டாம் நிலைக் காவலர் உடல் தகுதி தேர்வு துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:45

விழுப்புரம் : தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று துவங்கியது.



விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 2,256 ஆண்கள் மற்றும் 700 பெண்கள் என 2,956 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி, உடல் திறன் தேர்வு நேற்று துவங்கியது.விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில், நடந்த தேர்விற்கு காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை 300 பேருக்கும், 9:00 மணிக்கு மேல் 200 என 500 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



நேற்று காலை 90 பேர் வராததால், 410 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில், இறுதியாக 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இப்பணியை, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன், சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் பெருமாள், எஸ்.பி., ஸ்ரீநாதா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் தேவநாதன், கோவிந்தராஜ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்காஸ்ட்ரோ பார்வையிட்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X