கிரைம் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:50

மகள் மாயம்; தாய் புகார்



விருத்தாசலம் மணலுாரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் ஷர்மிளா, 19. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 23ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி, வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தேடியும் கிடைக்க வில்லை. புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து ஷர்மிளாவை தேடி வருகின்றனர்.



பஸ் மோதி முதியவர் பலி



கடலுார் அடுத்த வண்டரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலிசமுத்து, 70. இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினார். வழி தெரியாமல், விருத்தாசலம் - சிதம்பரம் சாலை, கோ.மாவிடந்தல் பகுதியில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் முதியவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.



ஆபாசமாக பேசியவர் கைது



விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று பொன்னேரி பைபாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முல்லாத்தோட்டம் பகுதி கார்த்திகேயன், 29; பொதுமக்களை ஆபாசமாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.



ஹான்ஸ் விற்றவர் கைது



மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மாத்துார் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக் கடையில் ஹான்ஸ் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 53; என்பவரை கைது செய்தனர்.



மதுபாட்டில் விற்றவர் கைது



விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மார்க்கெட் கமிட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற திட்டக்குடி அடுத்த காரையூரைச் சேர்ந்த ஜெயராமன், 42; என்பவரை கைது செய்து 5 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



வயிற்றுவலியால் ஒருவர் தற்கொலை



கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன், 65; வயிற்று வலியால் அவதியடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.



விஷம் குடித்தவர் பலி



விருத்தாசலம் கல்லுாரி சாலையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 52, கடலுாரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சூப்ரவைசராக பணிபுரிந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், சரியாக பணிக்கு செல்வதில்லை. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 22ம் தேதி பூச்சி மருந்து சாப்பிட்டார். கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.



தகராறில் 11 பேர் மீது வழக்கு



கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன் மகன் விக்னேஷ், 21; ரவி மகன் விக்கி, 22; நண்பர்களான இவர்களுக்குள் ஒரு ஆண்டுக்கு முன்பு மது அருந்தும் போது பிரச்னை ஏற்பட்டதால் முன்விரோதம் உண்டானது. திருச்சியில் ஐ.டி.ஐ., படிக்க சென்று விட்டு சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சொந்த ஊர் திரும்பினார். இதனையறிந்த விக்கி தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் விக்னேஷ் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். தட்டிக் கேட்ட அவரது தந்தை வேல்முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. கடலுார் புதுநகர் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து இருதரப்பிலும் சேர்ந்த விக்கி, பிரகாஷ், கிருஷ்ணகுமார், வேல்முருகன், அவரது மனைவி கவிதா உட்பட 11 பேரை தேடி வருகின்றனர்.



மணல் கடத்திய டிப்பர் பறிமுதல்



பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். காலை 6:00 மணியளவில் கணபதிகுறிச்சி வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து, டிராக்டர் டிரைவர் கணபதிகுறிச்சியைச் சேர்ந்த பால்ராஜ், 31; என்பவரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X