அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
05:50

சிதம்பரம் : கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குமராட்சியில் நடந்தது.



மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினர். அமைப்பு செயலர் முருகுமாறன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலர் தாமோதரன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெ., பேரவை செயலர் பாலசுந்தரம் வரவேற்றார்.



மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசுகையில், அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து நாளை (28ம் தேதி) நடக்கும் ஆர்ப்பாட்டத்தை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடத்த வேண்டும்.உள்ளாட்சி தேர்தல்களில் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும். விரைவில் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலில் கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்,என்றார்.



மாவட்ட துணை செயலாளர் தேன்மொழிகாத்தவராயசாமி, விவசாய பிரிவு செயலர் குணசேகரன், மீனவ பிரிவு செயலர் வீராசாமி, பாசறை செயலர் டேங்க் சண்முகம், அமைப்பு சார் ஓட்டுனர் அணி செயலர் தேவநாதன், தகவல் தொழில் நுட்ப செயலர் மணிகண்டன், மண்டல துணை செயலர் செண்பகராஜ், ஒன்றிய செயலர்கள் ராசாங்கம், அசோகன், கந்தன், வாசுமுருகையன், சிவக்குமார், ஜோதி பிராகாஷ், பாலகிருஷ்ணன், நகர செயலர்கள் செந்தில்குமார், தாடிமுருகன், பேரூர் செயலர்கள் மாரிமுத்து, ஆறுமுகம், எம்.ஜி.ஆர்.தாசன், பூமாலை கேசவன், சபியுல்லா, கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலர் சுந்தரமுர்த்தி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X