கார்கில் வெற்றி தினம் கவர்னர், முதல்வர் மரியாதை | செய்திகள் | Dinamalar
கார்கில் வெற்றி தினம் கவர்னர், முதல்வர் மரியாதை
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:06

புதுச்சேரி, : புதுச்சேரி அரசு சார்பில், கார்கில் வெற்றி தின விழா கொண்டாடப்பட்டது.



பாகிஸ்தானுடன் கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இந்த போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதியை கார்கில் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.நேற்று கார்கில் தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு துாணிற்கு கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, ஆகியோர் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.



சபாநாயகர் செல்வம்,அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்சரவணன்குமார், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், கலெக்டர் பூர்வா கார்க், முன்னாள் ராணுவ வீரர்கள், கார்கில் நினைவு துாணிற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X