மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர ஆர்வம்: இதுவரை 4.86 லட்சம் பேர் இணைப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர ஆர்வம்: இதுவரை 4.86 லட்சம் பேர் இணைப்பு
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

27 ஜூலை
2021
09:31
பதிவு செய்த நாள்
ஜூலை 27,2021 06:11

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரமாக அதிகரித்துள்ளது.



கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அச்சமயம் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செலவை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.இதனால் பலரும் ஆர்வமுடன் முதல்வர் காப்பீடு திட்டத்தில் தங்களை இணைத்து கொள்ள விண்ணப்பித்தனர். இதில் சேர கலெக்டர் அலுவலகத்தில் தனி அலுவலகம் செயல்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் உள்ளவர்கள், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து சேரலாம்.அடையாள அட்டை கிடைக்கும் வரை, காப்பீடு திட்டத்தில் சேர்ந்ததற்கான 'பிரத்யேக எண்'ணை கொண்டு அரசு, தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறலாம். தற்போது தொற்று குறைந்தாலும், 3வது அலை வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் 10 பேர் காப்பீடு திட்டத்தில் சேர வருவர்.



தற்போது தினமும் குறைந்தது 30 பேர் வருகின்றனர். கடந்த 6 மாதத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 337 பேர் இணைந்துள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், ''கொரோனா மற்றும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே காப்பீடு திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்'' என்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X