ஏலச்சீட்டில் ரூ.5 கோடி மோசடி; கடலூர் எஸ்.பி., யிடம் புகார் | கடலூர் செய்திகள் | Dinamalar
ஏலச்சீட்டில் ரூ.5 கோடி மோசடி; கடலூர் எஸ்.பி., யிடம் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:14

கடலுார் : பண்ருட்டியில் ஏலச்சீட்டு கட்டிய பணத்தை உரியவர்களுக்கு தராமல் ரூ. 5 கோடி வரை மோசடி செய்ததாக பெண் மற்றும் அவரது உறவினர்கள் மீது எஸ்.பி., யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.



கடலுார் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 100 பேர், முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் கடலுார் எஸ்.பி.,யை சந்தித்து அளித்த மனு:பண்ருட்டி திருவதிகை பகுதியைச்சேர்ந்தவர் மாரிமுத்து. பல ஆண்டுகளாக, ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் ஏலச் சீட்டு நடத்தி வந்தார். சுற்று பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் ஏலச்சீட்டு கட்டினர். அவருக்கு துணையாக மனைவி மற்றும் உறவினர்கள் இருந்தனர்.



இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் மாரிமுத்து திடீரென இறந்து விட்டார்.அதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏலச்சீட்டு தொகை தர இயலாது எனக்கூறி மிரட்டுகின்றனர். ஏலச்சீட்டு நடத்தி அதன்மூலம் பல சொத்துக்கள் வாங்கியுள்ளனர். வங்கி கணக்கிலும் வைப்பு தொகையாக பணம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது வரை ரூ.5 கோடி வரையில் ஏலச்சீட்டு தொகையை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே, பாதித்தவர்களுக்கு ஏல சீட்டு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X