வியாபார ரீதியான பிரச்னைக்கு தீர்வு | கடலூர் செய்திகள் | Dinamalar
வியாபார ரீதியான பிரச்னைக்கு தீர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:14

கடலுார் : 'மொத்த விற்பனையாளர்களுக்கு வியாபார ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது' என மொத்த கறிக்கோழி வியாபாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கடலுார் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டத் தலைவர் அன்பு தலைமை தாங்கினார். செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் முகமது பிலால், கவுரவத் தலைவர் ஷேக் பாதுார்ஷா முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மதியழகன், கோபி, நத்தர் அலி, அய்யப்பன், ராஜா, ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கறிக்கோழி வியாபாரிகள் பங்கேற்றனர்.



மொத்த விற்பனையாளர்களுக்கு வியாபார ரீதியாக ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண்பது. சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களிடையே சுமூக உறவை ஏற்படுத்துவது. மொத்த விற்பனையாளர்களுக்கும் மொத்த உற்பத்தி செய்யும் கறிக்கோழி நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படும் குறைபாடுகளை சங்கத்தின் மூலமாக தீர்வு காண்பது. சங்கத்தை ஒற்றுமையாக வழி நடத்துவது. மாதந்தோறும் கூட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத் தலைவர் பக்ரூதீன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X