2ம் நிலை காவலர்களுக்கு உடல் தகுதி தேர்வு | கடலூர் செய்திகள் | Dinamalar
2ம் நிலை காவலர்களுக்கு உடல் தகுதி தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:15

கடலுார் : கடலுாரில் 2ம் நிலை காவலர்களுக்கு நேற்று நடந்த உடல் தகுதி தேர்வில் 500 பேர்களில் 397 பேர் பங்கேற்றனர்.



தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் போலீஸ், சிறை, தீயணைப்புத் துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது. இந்த தேர்வில் 3794 பேர் பங்கேற்க உள்ளனர். வரும் 30ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.



தேர்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு உயரம், மார்பளவு, உடற்தகுதி ஆகியவற்றை போலீசார் சோதனை செய்தனர்.பின்னர் 1500 மீட்டர் ஓட்டம் நடத்தினர். நேற்று பட்டியலில் உள்ள 500 பேருக்கு 397 பேர் பங்கேற்றனர். இதில் 309 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் வரும் 6ம் தேதி நடக்கும் 2ம் கட்ட தேர்வில் பங்கேற்பர்.



இதில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 400, 100 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்படும்.தேர்வை டி.ஐ.ஜி., எழிலரசன், எஸ்.பி., சக்தி கணேசன் ஆய்வு செய்தனர். இம்மாதம் 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி தேர்வு கிடையாது. 2ம் தேதி ஆண்களுக்கான தேர்வு நடக்கும். 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை பெண்களுக்கான தேர்வு நடக்கும். காவலர் தேர்வில் பங்கேற்பவர்கள் 4 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வர வேண்டும்.



குறிப்பாக 2ம் தேதி தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் 29ம் தேதி தேதியும், 3ம் தேதி பங்கேற்பவர்கள் 30ம் தேதியும், கொரோனா பரிசோதனை செய்து சான்று பெற்று வரவேண்டும்.பரிசோதனையில் 'பாசிட்டிவ்'என மருத்துவ சான்றிதழ் பெற்ற தேர்வரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் தேர்வு மைய அதிகாரியிடம் சமர்ப்பித்து மறு உத்தரவு தேர்வு தேதியை தெரிந்து கொள்ள வேண்டும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X