ஜெ., பல்கலைக்கு அம்பேத்கர் பெயர் சூட்டிக்கொள்ளுங்கள்: சண்முகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:17

விழுப்புரம் : 'விழுப்புரம் ஜெ., பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டிக்கொள்ளுங்கள்' என முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.



விழுப்புரத்தில் ஜெ., பல்கலைக்கழகம் மூடப்படுவதை கண்டித்து, மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களுக்கான ஜெ., பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. இதற்கான, அறிவிப்பு சட்டசபையில் வெளியிடப்பட்டு, கடந்த பிப்ரவரி 25ம் தேதி கவர்னர் ஒப்புதல் வழங்கினார். 26ம் தேதி துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.



இதையடுத்து, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், நன்னடத்தை விதியால் எந்த பணியும் செய்ய முடியவில்லை. பல்கலைக்கழகம் அறிவித்தபோது, தற்போதையை பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், என் தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தை எப்படி பிரிக்கலாம் என கூறினார். தி.மு.க.,வில் தலைவர் முதல் தொண்டர் வரை ஊருக்கு ஒரு பேச்சு பேசி வருகின்றனர்.



அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெ., பல்கலைக்கழத்தை முடக்க நினைக்கின்றனர். அமைச்சர் பொன்முடி, நிதியில்லை எனக்கூறி மக்களை திசை திருப்பி ஏமாற்றுகிறார்.ஜெ., பல்கலைக்கழகத்தை நடத்த துப்பில்லாதவர்கள், தமிழகத்தில் புதிய கலைக்கல்லுாரிகள் உருவாக்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.



ஜெ., பல்கலைக்கழகம் செயல்படுவதால், பொன்முடிக்கு என்ன நஷ்டம். பொன்முடி நன்றி கெட்டவர். விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., இதற்கு எந்தவித குரலும் கொடுக்கவில்லை. 100 கோடி ரூபாய் ஒதுக்கி பல்கலைக்கழகம் நடத்த வக்கில்லை. ஆனால், மதுரையில் 200 கோடி ரூபாயில் கருணாநிதி பெயரில் நுாலகம் கட்டுவதற்கு நிதி உள்ளது.ஜெ., பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக கூறுகின்றனர்.



இந்தியாவிலேய மிகவும் மோசமான, சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது.இந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் கூடுதலாக நிதி வழங்குகிறது. ஆனால், ஒரு முறை 100 கோடி ரூபாய் ஒதுக்கி பல்கலைக்கழகத்தை நடத்த முடியவில்லையாம்.ஜெ., பெயரில் உள்ள பல்கலைக் கழகத்தை ஏற்றுக்கொள்ள பொன்முடிக்கு மனமில்லை. அ



வர் பள்ளி, கல்லுாரிகள் வைத்திருப்பதால், தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை துவங்க நினைத்திருப்பார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த தவறான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெ., பெயரில் இருப்பது பிடிக்கவில்லை என்றால், அம்பேத்கர் பெயரை சூட்டிக்கொள்ளுங்கள். எங்களுக்கு பெயர் முக்கியமில்லை. பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் JJ செத்து நாலாண்டுகள் தூங்கி வழிந்துவிட்டு கடைசீ நேரத்தில் ஒப்புக்கு காமா சோமான்னு ஒரு செங்கல்லை வச்ச மாதிரி பெயர்ப் பலகை வச்சா சரியாயிடுமா? சாரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X