உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து முழு சோதனை ஓட்டம் நடத்தப்படுமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
06:42

உசிலம்பட்டி- -வைகை அணை முழு கொள்ளவை எட்டவுள்ள நிலையில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு 35 கண்மாய்களுக்கும் கிடைக்கும் வகையில் முழு சோதனை ஓட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.அணையிலிருந்து மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் வரை மேல அச்சணம்பட்டி, தெப்பத்துப்பட்டி பகுதிகளில் 1.400 கி.மீ., நீளமான தொட்டிப்பாலங்களுடன் 27 கி.மீ.,க்கு பிரதான கால்வாய் மற்றும் உசிலம்பட்டி கண்மாய் உள்ளிட்ட 17 கண்மாய்கள் அடங்கிய 10.24 கி.மீ.,க்கு நீளமான வலது கிளைக் கால்வாய், பாரைப்பட்டி கண்மாய் உள்ளிட்ட 14 கண்மாய்களுக்கு 11.925 கி.மீ.,க்கு நீளமான இடது கால்வாய், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 4 கண்மாய்களை இணைக்கும் வகையில் 58 கிராம கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கால்வாயில் வினாடிக்கு 316 கன அடி நீரை 11 நாட்கள் திறந்தால் 35 கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 2,500 ஏக்கர் பாசனம் பெறும்.வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கு கூடுதலாக இருக்கும் போது தான் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். தற்போது அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால் இக்கால்வாயில் தண்ணீர் திறந்து முழு சோதனை ஓட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.வெள்ளோட்டத்தில் ஏமாற்றமேமாவட்ட நன்செய், புன்செய் விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன்: ஏற்கனவே 58 கால்வாயில் வெள்ளோட்டம் விட்ட போது 35 கண்மாய்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. தற்போது வைகை அணை நீர்மட்டம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட போதியளவு உள்ளது. மழை இன்றி விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இப்பகுதிக்கு அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். அணை நீர்மட்டம் 67 அடிக்கு மேல் சென்றால் தான் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.குழுக்கள் அமைத்து பராமரிப்பு58 கிராம கால்வாய் பாசன இளைஞர் குழு தலைவர் சவுந்தரபாண்டி: சோதனை ஓட்டத்தை 35 கண்மாய்களுக்கும் நீர் கிடைக்கும் வகையில் நடத்த வேண்டும். இக்கால்வாய் திட்டத்தை குழுக்கள் அமைத்து பராமரிக்க வேண்டும். அப்போது தான் ஆக்கிரமிப்பில் இருந்து கால்வாய், கண்மாய் பகுதிகளை காப்பாற்ற முடியும். பொதுப்பணித் துறையினர் எந்தெந்த கண்மாய் வழியாக அடுத்த கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற வழிமுறைகளை வெளியிட வேண்டும்.நிரந்தர அரசாணை தேவை58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன்: பெரியாறு வைகை நீர்மட்டத்தை கணக்கிட்டு கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அரசாணை பெற விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயத்தை நம்பியுள்ள இப்பகுதியில் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவது அத்தியாவசிய தேவை. நிரந்தர அரசாணையும் அரசு வெளியிட வேண்டும்.உடைப்பு ஏற்படும் இடங்கள்58 கிராம கால்வாய் பாசன சங்க இணை செயலாளர் சிவப்பிரகாசம்: பல கண்மாய்களில் முழுமையாக தண்ணீர் இல்லாத நிலையில் அவை நிரம்பினால் தான் அடுத்த கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் நிரம்பிய பின் அடுத்த கண்மாய்க்கு கொண்டு செல்வதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும். முழு அளவு தண்ணீர் திறக்கும் போது உடைப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.வீணாகும் தண்ணீர்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நேதாஜி: பெரியாறு வைகை ஆயக்கட்டு பகுதிகளில் நீண்ட காலமாக விவசாயம் நடக்கும் பகுதிகளை கணக்கில் கொள்ளவில்லை. பெரும்பாலான விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டன. மேலூர், திருப்பரங்குன்றம் பகுதிகளில் கால்வாய்களில் தண்ணீர் திறக்கும்போது குடியிருப்பு பகுதிகளில் சென்று வீணாகிறது. இதனை கணக்கிட்டு விவசாயம் அதிகம் நடக்கும் உசிலம்பட்டி பகுதிக்கு 58 கிராம கால்வாயில் தண்ணீர் வழங்க அரசு முன்வர வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X