தேனியில் சொத்துவரி வசூலிப்பு இன்று துவக்கம் | தேனி செய்திகள் | Dinamalar
தேனியில் சொத்துவரி வசூலிப்பு இன்று துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
07:10

தேனி, -''தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்கான சொத்துவரி வசூலிப்புப் பணிகள் இன்று படிவங்கள் வழங்கப்பட்டு துவங்கப்படுகிறது,'' என, கமிஷனர் சுப்பையா தெரிவித்துள்ளார்.இந்நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 29 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இதில் குடியிருப்புக்கள், வணிக நிறுவனங்களும் அடங்கும். நடப்பாண்டில் சொத்துவரி கணக்கிடப்பட்டு அதற்கான படிவங்களை வீடுவீடாக சென்று வழங்கி வசூலிக்கும் பணிகள் இன்று முதல் துவங்குகின்றன. சொத்துவரிக்கான முதல் அரையாண்டு ஆரம்பித்த 30 நாட்களுக்குள் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முடிய உள்ள முதல் அரையாண்டு வரியை ஏப்ரலுக்குள்ளும், அக்டோபர் முதல் மார்ச் முடிய உள்ள இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் மாதத்திற்குள்ளும் செலுத்த வேண்டும். வரியினங்களை விரைவாக செலுத்தி நகராட்சியின் வருவாயை அதிகரிக்க பொது மக்கள் உதவ வேண்டும் என, கமிஷனர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X