தற்காலிக மாற்றுப்பாதையில் தவிக்கும் வாகன ஓட்டுனர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2021
22:55

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் இருந்து நகருக்குள் பிரவேசிக்க பயன்படுத்தி வந்த தற்காலிக மாற்றுப்பாதையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு, வடுகபாளையம் பிரிவு ரயில்வே வழித்தடத்தை கடக்க, மேம்பால பணிகள் நடக்கிறது. இதற்காக, போக்குவரத்து தடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு ரோட்டில் வரும் வாகனங்களுக்கு, கிருஷ்ணா குளம் - ஜமீன் ஊத்துக்குளி - மார்க்கெட் ரோடு வழித்தடம் மாற்று வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், உள்ளூர்வாசிகள், டவுன் பஸ்கள் பாலக்காடு ரோட்டில் இருந்து, காந்தி நகர் ரோடு வழியே, வடுகபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் நகரப்பகுதிக்குள் செல்கின்றனர். இந்நிலையில், பாலக்காடு பிரதான ரோட்டில் இருந்து, காந்தி நகர் ரோடு திரும்பும் இடத்தில், மதுரை வீரன் கோவில் முன், மேம்பால கட்டுமான தளவாடங்ளை குவித்து, ரோட்டை அடைத்தனர்.அதற்கும் சளைக்காத வாகன ஓட்டுனர்கள், தனியார் திருமண மண்டபம் வழியே, குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து, காந்தி நகர் ரோட்டை அடைந்து பயணித்து வந்தனர்.இந்நிலையில், அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட கனரக வாகனத்தால், தரைப்பாலம் உடைந்து, அந்த தற்காலிக வழித்தடத்தையும் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில், நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், அந்த வழித்தடத்தில் வரும் வாகன ஓட்டுனர்கள், திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதாலும், பாலக்காடு ரோட்டை அடைய வழி தெரியாமல் திக்குமுக்காடுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக, தரைப்பாலம் சீரமைக்கும் வரை, மாற்றுப்பாதைக்கு அறிவிப்பு பலகை அமைக்க, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே, வாகன ஓட்டுனர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X