சில வரி செய்திகள்: சென்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
00:06

ஓட்டுனரை தாக்கி செயின் பறித்தவர் கைது


சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு, எம்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், 30; கார் ஓட்டுனர். அவருக்கும், எம்.எஸ்.எம்.நகர், 3வது தெருவைச் சேர்ந்த ராஜேஷ் 34, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. 18ம் தேதி இரவு, ஆனந்தை கத்தியால் தாக்கிய ராஜேஷ், 2.5 சவரன் செயினை பறித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றார். விசாரித்த சேத்துப்பட்டு போலீசார், ராஜேஷை கைது செய்தனர்.மின் விபத்தால் கார், பைக் தீக்கிரைஅசோக் நகர்: அசோக் நகர், டாக்டர் சுப்பராயன் நகர், ஐந்தாவது தெருவில் செல்லும் மின் கம்பி தீப்பிடித்து எரிந்தது. இதில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, சுதர்சனன் என்பவரின் காரும், தினேஷ் என்பவரது பைக் மற்றும் அருகில் இருந்த கடையும், தீ பிடித்து எரிந்தன. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபருக்கு 'போக்சோ'மாதவரம்:கொடுங்கையூர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஹேம்நாத்குமார் 26. இவர், மாதவரம் பால்பண்ணை அருகே, வாகனங்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் 13 வயது சிறுமியிடம், மொபைல் போனில் ஆபாச படம் பார்க்க வலியுறுத்தி, ஆபாச சைகை காட்டி, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விசாரித்த மாதவரம் அனைத்து மகளிர் போலீசார், ஹேம்நாத்குமாரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.'குட்கா' வியாபாரிகள் கைதுமாதவரம்: மாதவரம் பால்பண்ணை, ஆவின் பாலகம் அருகே, மாதவரம் பால்பண்ணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டூ - வீலரில் வந்த கொடுங்கையூரைச்சேர்ந்த ஸ்ரீமன் நாராயணன் 35, அயனாவரத்தைச் சேர்ந்த தன்ராஜ் 40, ஆகியோரை சோதனை செய்ததில், 18 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி சிக்கின. இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா மற்றும் டூ - வீலரை பறிமுதல் செய்தனர்.ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்புழல்: மாதவரம் மண்டலம், புழல் அடுத்த லட்சுமிபுரம் - கொளத்துார் ரெட்டேரி சந்திப்பில், மீன், இறைச்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தொடர்ந்தன. இது குறித்த புகாரையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், அங்குள்ள நடைபாதை கடைகளை அகற்றினர்.303 பேருக்கு நலத்திட்ட உதவிஆவடி: பட்டாபிராம், மார்டன் சிட்டியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக, 230 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. 51 பேருக்கு முதியோர் ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது. மொத்தம் 303 பேர் பயனடைந்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உட்பட, அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.கொத்தனாரிடம் நகை பறிப்புவளசரவாக்கம்: கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமு 58; கொத்தனார். ஆட்டோவில் வந்த மர்ம நபர், வளசரவாக்கத்தில் உள்ள தன் வீட்டில் வேலை இருப்பதாக கூறி, அவரை ஆட்டோவில் ஏற்றினார். வளசரவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலை அருகே வந்தவுடன், டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார். இருவரும் சேர்ந்து, ராமு அணிந்திருந்த, 2.5 சவரன் நகையை பறித்து, அவரை அங்கேயே விட்டு சென்றனர். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணை ஏமாற்றியவர் கைதுஎம்.கே.பி.நகர்: சென்னை, கொளத்துார், பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் டேனியேல் அசோக்குமார் 21. ஏற்கனவே திருமணமான இவர், அதை மறைத்து, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் படி, டேனியேலை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.மூதாட்டியரின் நகைகள் மாயம்தண்டையார்பேட்டை: சூளையைச் சேர்ந்தவர் காமாட்சி அம்மாள், 73. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட காமாட்சி அம்மாள், தடம் எண்: 159 பஸ்சில் தண்டையார்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். தண்டையார்பேட்டை பஸ் நிலையத்தில் இறங்கும்போது, அவரது 5 சவரன் செயின் மாயமாகி இருந்தது. அதே போல், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அலமேலு, 72. இவர் புதுவண்ணாரப்பேட்டையில் இருந்து பஸ் ஏறி தண்டையார்பேட்டை, காலரா மருத்துவமனை பஸ் நிலையத்தில் இறங்கிய நிலையில், அவரது 2 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இரு சம்பவங்கள் குறித்தும் தண்டையார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.மாடியில் இருந்து விழுந்த குழந்தை பலிசாஸ்திரி நகர்: ஒடிசாவைச் சேர்ந்தவர் பாரிக், 36; மனைவி ரஸ்மிதா, 30. இவர்கள், சாஸ்திரி நகர், 11வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 4வது மாடியில் தங்கி, வீட்டு வேலை செய்கின்றனர். இவர்களுக்கு, ஹமாசு பாரிக் என்ற பெயரில்,15 மாத ஆண் குழந்தை இருந்தது. ரஸ்மிதா, குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். வீட்டு ஜன்னலில் ஏறிய குழந்தை, கீழே எட்டி பார்த்த போது, எதிர்பாராதவிதமாக குழந்தை கீழே விழுந்து பலியானது. சாஸ்திரி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.சூதாட்டத்தில் ஈடுபட்டோர் கைதுசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த வடகரையில், தனியார் லாரி புக்கிங் அலுவலகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாடியநல்லுாரைச் சேர்ந்த சரவணன் 34, சுரேஷ் 34, கார்த்திக் 38, கமலக்கண்ணன் 40, ஆகியோரை செங்குன்றம் போலீசார் கைது செய்து 49 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். * மாதவரம், ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில், எஸ்.ஆர்.ஸ்போர்ட்ஸ் அண்ட் ரெக்ரியேஷன் கிளப் இயங்கி வருகிறது. அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட, பெரம்பூரைச் சேர்ந்த மதனகோபால் 28, அரும்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் 21, ஆகியோரை, மாதவரம் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X