கிரைம் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
06:32

பைக் திருட்டுநெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியை சேர்ந்தவர் சத்தியதாஸ், 27; விவசாயியான இவர் தனது யமஹா பைக்கை இரண்டு நாட்களுக்கு முன் வீட்டின் முன் நிறுத்தி பூட்டியிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடனை தேடி வருகின்றனர்.வழிப்பறி செய்தவருக்கு வலை


நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்தவர் கோபால்,35; விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் கடலுாரில் இருந்து வந்து கொண்டிருந்தார். எய்தனுார் அருகே ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி கோபாலை மிரட்டி அவரிடமிருந்த ரூ. 1000 பறித்துச் சென்றார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, வழிபறி செய்த குப்பன்குளத்தை சேர்ந்த விக்ரமன்,28; என்பவரை தேடி வருகின்றனர். விக்ரமன் கொலை வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.மகள் மாயம்; தாய் புகார்விருத்தாசலம் பூதாமூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் அமிர்தலட்சுமி, 19; நேற்றுமுன்தினம் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் அமிர்தாரகு கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து அமிர்தலட்சுமியை தேடி வருகின்றனர்.அடையாளம் தெரியாத மூதாட்டி சாவுவிருத்தாசலம் மீன் மார்க்கெட் எதிரே நேற்றுமுன்தினம் 65 வயதுள்ள அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடந்தார். விருத்தாசலம் போலீசார் சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கத்தியால் வெட்டியவர் கைதுஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்கிரி மானியம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்நேற்று முன் தினம் இரவு நடந்தது. அங்கு வந்த கலைமணி, 40; கடந்த ஆண்டும் பணத்தை வசூல் செய்து விழா நடத்தவில்லை என கூறி தகராறு செய்தார். இதை ஜெயக்குமார், 45; தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலைமணி கத்தியால் ஜெயக்குமார், அவரது தம்பி மகன் ஜெயசூர்யா ஆகியோரை வெட்டினார். பலத்த காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி வழக்குப் பதிந்து கலைமணியை கைது செய்தார்.பைக்குகள் மோதி ஒருவர் பலிகாட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன், 49; விவசாயி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் அழகேசன், 43; இருவரும் கடந்த 20ம் தேதி மாலை பொருள்கள் வாங்கிக்கொண்டு காட்டுமன்னார்கோவிலில் இருந்து கீழக்கடம்பூருக்கு ரங்கநாதபுரம் வழியாக பைக்கில் சென்றனர். பூவிழந்தநல்லுார் சுடுகாடு அருகே எதிரில் மிக வேகமாக வந்த பைக் மோதியது. இதில் விவசாயி ராஜேந்திரன், அழகேசன் பலத்த காயமடைந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். ராஜேந்திரன் மனைவி புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.தகராறில் தாக்கிய இருவர் கைதுசேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டை சிதம்பரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயவேல், 42; இவரது வீட்டின் அருகிலிருந்த ரோடு சமன் செய்யும் உருளையை அதே ஊரைச்சேர்ந்த வெள்ளையன் என்ற ஆறுமுகம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு எடுத்து சென்று கொடிகம்பம் நட்டார். புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் சென்று ஆறுமுகம் வைத்திருந்த உருளையை மீட்டு ஜெயவேலிடம் ஒப்படைத்ததால் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் ஆறுமுகத்தின் மகன் விக்னேஷ், 21; அவரது ஆதரவாளர் நவீன், 21 ; ஆகியோர் ஜெயவேலை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து ஜெயவேல் கொடுத்த புகாரின்பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விக்னேஷ், நவீன் ஆகியோரை கைது செய்தனர்.கிணற்றில் விழுந்து ஒருவர் பலிஉளுந்துார்பேட்டை தாலுக்கா குச்சிப்பாளையம், கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்முருகன்,36; விவசாயி; இவர் கடந்த 25 ம்தேதி பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வந்தார்.அங்கு ஏழுமலை என்பவரின் மோட்டார் கொட்டகையில் உள்ள தொட்டியில் குடிக்க தண்ணீர் எடுக்கும் போது அருகிலிருந்த தரை கிணற்றில் தவறி விழுந்தார்.காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி இறந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ஒருவர் தற்கொலைபண்ருட்டி அடுத்த ஒறையூர் பாலமுருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை,42; கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் அவரது மனைவி கஸ்துாரி பெரியசெவலையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த ராஜதுரை நேற்றுமுன்தினம் இரவு பிராந்தியில் விஷம் கலந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X