கடைகளில் அதிகாரிகள் குழு சோதனை: பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கடைகளில் அதிகாரிகள் குழு சோதனை: பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
22:38

உடுமலை : நகராட்சி பகுதியிலுள்ள கடைகளில், நகராட்சி சுகாதார பிரிவு, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.



தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனையை தடுக்கும் வகையிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையிலும், நகராட்சி சுகாதாரப்பிரிவு, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மற்றும் போலீசார் கொண்ட சிறப்பு பிரிவு அமைத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், உடுமலை நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன், உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், எஸ்.ஐ.,முருகன் மற்றும் சுகாதார பிரிவு ஆய்வாளர்களை கொண்ட அதிகாரிகள் குழுவினர், மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த, 3 கடைகளுக்கு, தலா 500 ரூபாய் வீதம், 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவை பறிமுதல் செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குட்கா, பான்மசாலா, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், கடைகளுக்கு சீல் வைத்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X