மொபைலில் ஆடியோ வௌியிட்டு பெண் தற்கொலை: மூவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
04:35

கடலுார்-தன் சாவிற்கு காரணமானவர்கள் குறித்து மொபைல் போனில் ஆடியோ வெளியிட்ட, பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு துாண்டியதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடலுார் அடுத்த மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் கண்ணபிரான் மனைவி நீலாவதி, 36; திருமணமாகி 15 ஆண்டு ஆகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால், தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார்.இவர், தனது உறவினரான வீரமணி என்பவருக்கு சொந்தமான வயல் வழியாக தனது வயலுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது, எங்கள் வயல் வழியாக வரவேண்டாம் என, அடிக்கடி திட்டியுள்ளனர்.நேற்று காலை 10:30 மணியளவில் வீரமணி வயல் வழியாக நீலாவதி சென்றபோது, வீரமணி, 46; அவரது மனைவி ராஜேஸ்வரி, 35; தம்பி சச்சிதானந்தம் 41; ஆகியோர் நீலாவதியை திட்டியுள்ளனர்.இதனால் வேதனையடைந்த நீலாவதி, தன்னை ஆபாசமாக மூவரும் திட்டியதால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது சாவிற்கு அவர்கள் மூவரும்தான் காரணம் என, தனது மொபைல் போனில் பேசி ரெக்கார்டு செய்துவிட்டு, கலைக்கொல்லி மருந்து குடித்து, வயலிலேயே இறந்துவிட்டார்.இதுகுறித்து நீலாவதியின் தம்பி சிவசக்தி கொடுத்த புகாரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார், வீரமணி, அவரது மனைவி ராஜேஸ்வரி, தம்பி சச்சிதானந்தம் ஆகியோர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X