தி.மு.க.,வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் | செய்திகள் | Dinamalar
தி.மு.க.,வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
05:00

புதுச்சேரி-தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, நேற்று புதுச்சேரியில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உப்பளம் அ.தி.மு.க., அலுவலகம் முன்பு, கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெ., பேரவை செயலர் பாஸ்கரன், தேர்தல் பிரிவு செயலர் வையாபுரி மணிகண்டன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேற்கு மாநில அ.தி.மு.க., சார்பில் லெனின் வீதி கட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கினார்.அவைத்தலைவர் ராமதாஸ், துணைத் தலைவர் நந்தன், ஓவியா ஆனந்தன், இணைச் செயலர்கள் காசிநாதன், திருநாவுக்கரசு உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X