வான்முகில் வழாது பெய்ய வேண்டும்... நம்பிக்கையூட்டும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
06:13

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், எதிர்காலத்தில், பாசன நீராதாரம் பெருக, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போன்ற திட்டங்கள் தான் கைகொடுக்க வேண்டும்.



விவசாய பாசனத்துக்கு குளம் (நீர் நிலைகள்), நிலத்தடி நீர் என்ற இரண்டு நீராதாரங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. இவை, அந்தந்த பகுதிகளில் இருந்து பெறப்படுபவையாக இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகள் என்ற உள்ளூர் நீராதார உதவியுடனான பாசனம் என்பது சமீப காலமாக, வெகுவாக குறைந்துவிட்டது.உறிஞ்சப்படும் நீர்கடந்த நாற்பதாண்டு காலமாக பாசன நீராதாரமாக, நிலத்தடிநீர் விளங்குகிறது. இதன் மூலம், திருப்பூர் உட்பட மாநிலம் முழுவதும், நீர் பெருமளவு உறிஞ்சப்பட்டு கொண்டிருக்கிறது. இதனால், பல இடங்களில், நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது.



ஆனால், எதிர்காலத்தில், நிலத்தடி நீர் மூலம் நடைபெறும் பாசனப் பரப்பளவின் வளர்ச்சி குறைவதற்கான வாய்ப்பே அதிகம்.பராமரிப்பற்ற கால்வாய்விவசாயத்திற்கு உதவக்கூடிய பாசன வகைகளில் ஒன்று, கால்வாய்ப்பாசனம். ஆனால், இவை விரிவுபடுத்தப்படுவது போல் தெரிந்தாலும், யதார்த்தத்துடன் ஒப்பிடுகையில், இதன் பயன்பாடு குறுகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.



பி.ஏ.பி., போன்ற கால்வாய்ப்பாசனங்களுக்கான வாய்க்கால், கிளை வாய்க்கால், மதகு போன்றவை பராமரிக்கப்படாமல் இருக்கின்றன; இதன் மூலம், கடைமடை வரை தண்ணீர் பாய்வதில்லை என்பது குற்றச்சாட்டாக தொடர்கிறது.கான்கிரீட் காடுகள்நீர்ப்பாசன பரப்பளவை பொறுத்தவரை, தமிழகம், ஐம்பது ஆண்டுகளாக வளர்ச்சி பெறாததாகவே உள்ளது. திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள், இதற்கு சாட்சியாக விளங் குகின்றன. பல விளைநிலங்கள், கான்கிரீட் காடுகளாக மாறியிருக்கின்றன.



விவசாயிகள் வருவாயை உயர்த்துவதற்கு, நீர்ப்பாசனப் பரப்பை உயர்த்துவதும் முக்கியமான காரணியாக உள்ளது. நீர்ப்பாசனம் குறைந்து விட்டாலே, உணவு உற்பத்தி குறைந்து விடும். கிராமங்களில் வேலையிழப்பு ஏற்படும். வேலை தேடி மக்கள் நகரங்களுக்கு செல்ல துவங்குவர்.திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், நீர்ப்பாசனப்பரப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், விவசாய பாசனத்திற்கான நேரடி திட்டம் அல்ல; ஆனால், குளம், குட்டைகளை நிரப் புவதன் மூலம், நிலத்தடி நீர் பெருகி, நீராதாரம் உயரும்.



இதன்மூலம், நீர்ப்பாசனப்பரப்பை உயர்த்துவதற்கான வாய்ப்பு உருவாகும். திருப்பூர், விவசாய மாவட்டமாக கோலோச்சுவதற்கு, இது துணைபுரியும்.தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும்,அத்திக்கடவு - அவிநாசி திட்டம்,விவசாயப்பாசனத்திற்கான நேரடி திட்டம் அல்ல; ஆனால், குளம், குட்டைகளை நிரப்புவதன் மூலம், நிலத்தடி நீர் பெருகி, நீராதாரம் உயரும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X