ஏர்போர்ட்டில் துப்பாக்கி தோட்டாக்களுடன் நுழைந்த பயணி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஏர்போர்ட்டில் துப்பாக்கி தோட்டாக்களுடன் நுழைந்த பயணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
06:43

கோவை : கோவை விமான நிலையத்தில், துப்பாக்கி தோட்டாக்களுடன் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை விமான நிலையத்தில், சென்னை செல்லும் விமானத்தில் பயணிக்க, நுழைவாயில் வழியாக பயணிகள் உள்ளே சென்று கொண்டிருந்தனர். அப்போது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சோதனையிட்டனர்.அப்போது, பயணி ஒருவரின் பையில், 92 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விசாரணை நடத்தினர்.



அவர், திருப்பூரை சேர்ந்த சசிகுமார் என்பதும், உரிமம் பெற்ற துப்பாக்கி பயன்படுத்தி வருவதாகவும். தவறுதலாக துப்பாக்கி தோட்டாக்களை எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X