நிபந்தனை ஜாமினில் வெளிவந்த போதகர் மீண்டும் சிறையில் அடைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
07:18

கோவை : நிபந்தனை ஜாமின் பெற்ற போதகர், சர்ச்சில் சென்று தகராறில் ஈடுபட்டதால், மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



கோவை ரேஸ்கோர்ஸ் தென்னிந்திய திருச்சபையின், கோவை திருமண்டல நிர்வாகக்குழு கூட்டம், ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில், கடந்த, 19ம் தேதி நடந்தது.திருச்சபையில் உள்ள ஊழல் குறித்து தர்மபுரி சர்ச் நிர்வாக உறுப்பினர் வக்கீல் நேச மெர்லின் புகார் கூறினார். அப்போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்தது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் வக்கீல் நேச மெர்லின் புகார் செய்தார்.இதையடுத்து, போதகர் சார்லஸ் சாம்ராஜ், 43, ஆலய போதகர் வில்சன் குமார், 48 உட்பட, 15 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். அதேபோல், சி.எஸ்.ஐ., ஆலய செயலாளர் ஜேக்கப், 73 அளித்த புகாரின்படி, நேச மெர்லின் உட்பட இருவர் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



வக்கீலை தாக்கிய வழக்கில் தொடர்புடைய வில்சன்குமார் என்பவரை, ரேஸ்கோர்ஸ் போலீசார் கடந்த, 21ம் தேதி கைது செய்தனர். இந்த மோதல் குறித்து போதகர் சார்லஸ் சாம்ராஜை, பிஷப் திமோத்தி ரவீந்தர், 'சஸ்பெண்ட்' செய்தார். புதிதாக சி.எஸ்.ஐ., திருமண்டல சேர்மன் பிரின்ஸ் கால்வின் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த, போதகர் சார்லஸ் சாம்ராஜ், நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்றார்.



ஆனால், நிபந்தனைகளை மீறி, நேற்று முன்தினம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சர்ச் ஒன்றுக்கு சென்று சார்லஸ், தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து, இரு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X