காட்டுப்பன்றி தொல்லைக்கு முடிவு கட்டுங்க! கோவை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
07:19

கோவை : ''பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் செய்தது போல் தீர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்று, கோவையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.



வேளாண் பட்ஜெட் குறித்த கருத்து கேட்பு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:பரமசிவம், தலைவர், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்-திருமூர்த்தி நீர்த்தேக்கதிட்டக்குழு:விவசாயத்துக்கு, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். நோய் தாக்கத்தால் தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும்.



தேங்காய்க்கு சீரான விலை கிடைப்பதில்லை. தமிழக அரசு கூடுதல் விலை வைத்து, கொப்பரை கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன்பெறுவர். ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும். தென்னை நல வாரியத்தை உருவாக்கி, இளநீரை கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.



சுந்தரசாமி, தொண்டாமுத்துார்:காட்டுப்பன்றிகளால் பயிர் சாகுபடி குறைந்து விட்டது. 20 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். மான், மயில், குரங்கு, முயல் என வன விலங்குகள் பயிர்களை நாசம் செய்கின்றன. முயல்கள், சொட்டு நீர் குழாய்களை கடித்து விடுகின்றன.



சின்னசாமி, தலைவர், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டக்குழு:பசுந்தாள் உர விதைகள் கிடைப்பதற்கு வேளாண் துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். அணைகள், குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. தென்னை மரங்களுக்கு நுண்ணுாட்டச்சத்து, மானிய விலையில் அரசு வினியோகிக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வேண்டும்.



பட்டீஸ்வரன், தலைவர்,பழைய ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம்:நேரடி நெல் கொள்முதல் நிலையம், அறுவடைக்கு முன்பே திறக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டம் பிர்கா வாரியாக தரப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், ஒவ்வொரு தனி மனிதனும் பாதிக்கப்பட்டாலும், இழப்பீடு தர வேண்டும். தென்னையில் ஊடு பயிராக ஜாதிக்காய் பயிர் செய்கின்றனர். அதன் நாற்றுக்கு மானியம் வழங்க வேண்டும்.



கந்தசாமி, பொதுச்செயலாளர், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்:வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் இருப்பதால், பயிர் சேதம், உயிர் சேதம் தடுக்க முடியாத நிலை உள்ளது. அந்த சட்டத்தை திருத்த வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசு அனுமதி பெற்று, பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை சுட்டுக்கொன்று விட்டனர். அது போல் செய்தால் தான், தமிழக விவசாயிகள் காப்பாற்றப்படுவர்.



வன விலங்குகளால் நாசம் செய்யப்படும் பயிர்களுக்கு இழப்பீடு தருவதற்கு ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவு. அதை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு, 'பிரதமர் கிசான் நிதி' தருவதை போல, மாநில அரசும் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.



துரைசாமி, தலைவர், உழவர் நலக்குழு:ஒவ்வொரு முறையும் சிறு, குறு விவசாயிகள் சான்றுக்கு அலைய வேண்டியிருக்கிறது. அவ்வாறு இல்லாமல் விவசாயிகளுக்கு புகைப்படம் ஒட்டிய டிஜிட்டல் கார்டு தரப்பட வேண்டும்.வெவ்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் திப்பம்பட்டி ஆறுசாமி, பழனிசாமி, துரைசாமி, மலரவன், இளங்கோவன் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X