தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
07:22

கோவை : தி.மு.க., அரசை கண்டித்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



விடியல் தரப்போவதாகவும், 'நீட்' தேர்வை ரத்து செய்வதாகவும் தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகள் அளித்த தி.மு.க., அரசு, ஓட்டளித்த மக்களை ஏமாற்றுவதாக கூறி, அ.தி.மு.க.,வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை குனியமுத்துாரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



சிங்காநல்லுாரில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயராம் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., மகேஸ்வரி உட்பட, 100க்கும் மேற்பட்டோர், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் தலைமையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'ஸ்டாலினை வரச்சொல்; விடியலை தரச்சொல்' என, கோஷங்கள் எழுப்பப்பட்டன.



நஞ்சுண்டாபுரம், ராஜவீதி, கோணியம்மன் கோவில் பகுதி, ராமநாதபுரம், வடவள்ளி, சாய்பாபாகாலனி, கணபதி பஸ் ஸ்டாப் என பல்வேறு இடங்களில் அ.தி.மு.க., வினர் கறுப்பு சட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்



.'துணிவுடன் எதிர்கொள்வோம்'




குனியமுத்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்தது. ஆனால், எதையும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக, 'நீட்' தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு, 1,000 ரூபாய் வழங்குவது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாமல் மக்களை ஏமாற்றுகின்றனர்.



மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க முடியவில்லை. கொரோனா தொற்று தடுப்பில் அரசு கவனம் செலுத்தவில்லை. அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவது, போலீசாரை வைத்து மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை நாங்கள் துணிவுடன் எதிர்கொள்வோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X