டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த மதுரை இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
07:33

மதுரை : மதுரையில் டெய்லர் அர்ஷத்திடம் 32, ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த அர்ஷத். டெய்லரான இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார். அந்த பணத்தோடு கூடுதல் பணத்தேவைக்காக பாண்டி என்பவர் அழைத்தன்பேரில் ஜூலை 5ல் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிக்க வேண்டும் என்றுக்கூறி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை ஜீப்பில் அழைத்துச் சென்றார்.



சிறிது துாரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு அர்ஷத்தை இறக்கிவிட்டார். பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்துவிடுவேன் என மிரட்டினார். மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி., சந்திரமவுலி விசாரணையில் உண்மை எனத்தெரிந்தது.



வசந்தி, பாண்டி, கார்த்திக் உட்பட 5 பேர் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



உண்மையில் நடந்தது என்ன




போலீசார் கூறியதாவது: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சிலர் கூறியதை நம்பி அர்ஷத் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். இதை பாண்டி, கார்த்திக் மற்றும் செட்டியார் என்பவர் மூலம் அறிந்த வசந்தி, விசாரிப்பது போல் அழைத்துச்சென்று மிரட்டி பணம் பறித்துள்ளார். 'டப்ளிங்' செய்வது குற்றம் என்பதால் இவ்விவகாரத்தை வெளியே அவர் சொல்ல மாட்டார் என நினைத்துள்ளார்.



பல முறை அர்ஷத் பணம் கேட்டு நச்சரிக்க, ஒரு கட்டத்தில் 'என் பிள்ளை சத்தியமா உன்னிடம் பறிமுதல் செய்த பையில் நோட்டு புக்தான் இருந்தது. பணமே இல்லை. தொடர்ந்து நச்சரித்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்' என மிரட்டியுள்ளார். இதெல்லாம் விசாரணையில் உறுதியானதை தொடர்ந்தே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
01-ஆக-202122:10:05 IST Report Abuse
thonipuramVijay நாடு ரோட்டில் இவள் தலையை துண்டிக்க வேண்டும் , போலீஸே திருடனானல் நாடு என்னாவது
Rate this:
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
02-ஆக-202120:47:24 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN"ரோட்டில் இவள் தலையை துண்டிக்க வேண்டும்" ஆனா அதுக்கு முன்னாடி...
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
01-ஆக-202119:04:46 IST Report Abuse
krishnamurthy பனி நீக்கம் செய்யவேண்டும்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
01-ஆக-202111:22:54 IST Report Abuse
Hari குற்றம் செய்தவர்கள் எப்போதும் ,சிக்கமாட்டார்கள் தி மு க ஆட்சியில் ,இதில் உண்மைத்தன்மை கள்ளப்பணம் மாற்றும் கும்மலை பிக்கப்போன இன்ஸ்பெக்டருக்கு தண்டனை .உண்மை எப்போது வெளியே வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X