பஸ்களில் சமூக இடைவெளி கேள்விக்குறி! கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
04:46

கடலூர் : கடலுார் மாவட்டத்தில் பஸ்களில் சமூக இடைவெளி பயணம் கேள்விக்குறியாகிவிட்டது. அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், குறைந்துவிட்ட கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி, தனது தாக்குதலை தொடுத்தது. லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியும் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனிடையே, இரண்டாவது அலை பரவல் முதல் அலையை விட வேகமெடுத்ததால், கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.



கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாவதால் இரண்டாம் அலையின் தாக்கம் கணிசமாக குறைகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் பாதித்தனர். உயிரிழப்புகளும் ஏராளம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் ஊரடங்கு அறிவித்து கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.



அரசின் அதிரடி நட வடிக்கை காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் தினசரி 1000 பேர் வரையில் பாதிக்கப்பட்ட தொற்று தற்போது 60 ஆகவும், தினசரி 20 பேர் வரையில் இறந்தனர். தற்போது உயிரிழப்பு குறைந்துள்ளது.



பஸ்கள் இயக்க அனுமதி




கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 50 சதவீத பயணிகள் பயணிக்கலாம் என்பது உட்பட பல தளர்வுகள் அறிவித்ததால் கடலுார் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து துவங்கியது. பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில் சில பஸ்களில் நிர்ணயித்த அளவை விட கூடுதல் எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.



3 பேர் அமரக்கூடிய இருக்கைகளில் இருவர் மற்றும் இருவர் சீட்டில் ஒருவர் அமர வைக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும். பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் அரசு உத்தரவிட்டுள்ளதால் அந்த நடைமுறைகள் பஸ்களில் கடைபிடிக்கப்பட்டது.



பஸ்களில் பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்த பிறகே, பஸ்களில் பயணிக்க டிரைவர், கண்டக்டர்கள் அனுமதித்தனர். முன்னதாக பஸ் நிலையத்திற்கு பஸ்களுக்கும் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகள், போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மாவட்டம் முழுவதும் பஸ்களில், பயணிகள் முக கவசம் அணியாமல் பயணிக்கிறார்களா என சோதனை செய்து முக கவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



தற்போது பஸ்கள், இருக்கைகள் சுத்தம் செய்வதில்லை. சமூக இடைவெளியும் கடைபிடிப்பதில்லை, முகக்கவசம் கூட பலரும் அணியாமல் பயணிக்கின்றனர். ஆரம்பத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளும் சோதனை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.



இது குறித்து பஸ் ஊழியர்கள் கூறுகையில், அரசு பஸ்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் பெண்களுக்கு இலவச பயணத்தால் வருமானமே இல்லை, போதாக்குறைக்கு டீசல் விலையும் உயர்ந்துவிட்டது. குறைந்த பயணிகளை வைத்துக்கொண்டு ஓட்டினால் மேலும் நஷ்டம்தான் ஏற்படும். ஏற்கனவே, புலம்பிய தனியார் பஸ் நிர்வாகத்தினரும் டீசல் விலை உயர்வையே காரணமாக தெரிவிக்கின்றனர்.



பஸ்களில் பயணிகளை ஏற வேண்டாம் என, கூறினால் பிரச்னையில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் கடலுார் மாவட்டத்தில் பஸ்களில் சமூக இடைவெளி பயணம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இதனால், குறைந்துவிட்ட கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-202121:37:22 IST Report Abuse
அருணா இதை விட கோயில்களில் பாதுகாப்பு மேற் கொள்வர்
Rate this:
Cancel
30-ஜூலை-202119:06:31 IST Report Abuse
அப்புசாமி மக்கள் தொகை மூச்சு முட்டுது. ஜனங்க பறவாப் பறக்குது. அதிகாரிங்க என்ன செய்ய முடியும்? அதிகாரிங்க ஏதாவது பேசினாலே வாயிலேயே நாலு சாத்திருவாங்க. கொரோனாவுல போறவன் போகட்டும். இருக்கிறவங்களுக்கு புது விடியல் கிடைக்கட்டும்.
Rate this:
Cancel
30-ஜூலை-202112:10:20 IST Report Abuse
Ram Pollachi என் சமூகம் கொரோனாவிற்கு முன்னதாகவே சென்றுவிடும். பணத்திற்கு ஆசை படாத சேவை உள்ளம் கொண்ட ஓட்டுநர், நடத்துனர் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X