தரமற்ற நெல் விதையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தர்ணா! இழப்பீடு வழங்க காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
04:47

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தரமற்ற நெல் விதையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதில், விதை ஆய்வு அலுவலர்கள் காலதாமதம் செய்ததால், விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



விழுப்புரம் அடுத்த காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை, அனுமந்தபுரம், அடங்குணம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடப்பு பருவத்தில் தனியார் நிறுவனத்திடம் 606 சன்ன ரக நெல் விதை வாங்கி பயிர் நடவு செய்திருந்தனர். இந்த நெற்பயிர்கள் வளர்ச்சியின்றியும், பூச்சி தாக்குதலாலும் 50 ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து வேளாண் துறை மற்றும் விதை ஆய்வு துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். அதன்படி, வேளாண்மைத் துறை மற்றும் விதை ஆய்வு அலுவலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்குச் சென்று கடந்த மாதம் ஆய்வு செய்தனர்.ஆய்வில், நெற்பயிர்கள் சேதமடைந்தது உறுதி செய்யப்பட்டதால், விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தருவதாக, விதை ஆய்வு துறை அதிகாரிகள் கூறினர்.



இதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, முதலில் ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறினர். அப்போது, முதல் கட்டமாக 18 ஏக்கருக்கு மட்டுமே இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இரண்டாம் கட்டமாக வழங்குவதாக அதிகாரிகள் கூறினர்.முதல்கட்டத்தில், நெல் சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.



இதையறிந்த, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உடனடியாக இழப்பீடு கேட்டனர். இதற்காக, கடந்த ஒரு மாதமாக வட்டார விதை ஆய்வு அலுவலகத்திற்கு அலைந்து வந்தனர்.அங்கு விதை ஆய்வாளர்கள் சரியான பதில் கூறாததால், நேற்று விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்திற்கு விவசாயிகள் வந்தனர். அங்குள்ள அதிகாரிகளிடம் இழப்பீடு கேட்டபோது, முறையாக பதில் அளிக்கவில்லை.



இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அலுவலக வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, இன்று பகல் 12:00 மணிக்குள் உரிய இழப்பீடு வழங்குவதாக விதை ஆய்வு துறை அதிகாரிகள், உறுதியளித்தனர்.இதையடுத்து, தர்ணாவை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X