தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்; கடலூர் மருத்துவமனையில் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
04:47

கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட மக்கள் அதிகளவில் திரண்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு, உயிரிழப்பு என, அச்சம் காரணமாக மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து, மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். ஆனால் தடுப் பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, இரண்டாவது தவணைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து விட்டது. இதில் பலர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டு, இரண்டாவது தவணைக்காக காத்திருக்கின்றனர்.



மாவட்டத்திற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கவில்லை. கோவி ஷீல்டு தடுப்பூசி மட்டுமே அதிகளவில் ஒதுக்கப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று கடலுார் மாவட்டத்திற்கு 5760 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்தது. இதையறிந்த மக்கள் அதிகளவில் அரசு மருத்துவமனைகளில் திரண்டனர்.



கடலுார் அரசு மருத்துவமனையில் 400 பேருக்கு மட்டுமே கோவாக்சின் போடப்பட்ட நிலையில், அதிகளவில் கூடிய மக்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைடுத்து, டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப் பட்து. இதனால் மருத்துமவனையில் பர பரப்பு ஏற்பட்டது. திருவந்திபுரம் உள்ளிட்ட பல ஆரம்ப சுகாதர நிலையங்களில் நீண்ட நேரம் வரையில் காத்திருந்தும் கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X