மாற்று குடியிருப்புகள் மோசம்: குடிசைக்கு மாறும் பழங்குடிகள் | நீலகிரி செய்திகள் | Dinamalar
மாற்று குடியிருப்புகள் மோசம்: குடிசைக்கு மாறும் பழங்குடிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
05:02

பந்தலுார்:பந்தலுார் அருகே, பென்னை கிராமத்தில் குடியிருப்புகள் ஒழுகுவதால், மக்கள் குடிசைக்கு மாறி வரும் நிலை உருவாகியுள்ளது.முதுமலை புலிகள் காப்பகம் பென்னை கிராமத்தில் குடியிருந்த பழங்குடியின மக்கள், மாற்று குடியமர்வு திட்டத்தின் கீழ், அதே கிராமம் அருகே, தனியார் இடம் பெறப்பட்டு, 2019-ம் ஆண்டு, வீடு கட்டி குடியமர்த்தப்பட்டனர்.குடியிருப்புகளில், அடித்தளம் முதல் மேற்கூரை வரை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையில், குடியிருப்புகள் ஒழுகி மிகவும் மோசமான நிலையில் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் புதிய தொகுப்பு வீடு அருகே, குடிசை அமைத்து குடியிருக்க துவங்கியுள்ளனர்.பலமுறை புகார் அளித்தும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குடியிருப்புகள் பழுது குறித்து கண்டுக்கொள்ளவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், நிரந்தரமாக குடிசையில் தங்க முடிவு செய்துள்ளனர்.கூடலுார் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் மோகன் குமாரமங்கலம் கூறுகையில்,''இது குறித்து நேரடி ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X