பெற்ற குழந்தைகளை இரக்கமின்றி விற்ற தம்பதி! மீட்டு வந்த போலீசார்; 6 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2021
05:12

ஊட்டி;ஊட்டியில், 55 ஆயிரம் ரூபாய்க்கு இரு குழந்தைகளை விற்பனை செய்த தம்பதி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே காந்தள் பகுதியை சேர்ந்த ராபின், 29, மோனிஷா, 24. இந்த தம்பதிக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், மூன்று வயது ஆண் குழந்தை, மோனிஷாவின் அக்கா பிரவீணா பராமரிப்பில் இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராபின், பிரவீணாவிடம் சென்று, குழந்தையை தருமாறு வற்புறுத்தி கேட்டுள்ளார். சந்தேகமடைந்த பிரவீணா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினருடன், ராபின் வீட்டுக்கு சென்று மற்ற இரண்டு குழந்தைகள் குறித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து, ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.அதில், 2 வயது பெண் குழந்தையை திருப்பூருக்கும், 3 மாத ஆண் குழந்தையை சேலத்துக்கும் விற்றது தெரியவந்தது. குழந்தைகளை மீட்ட போலீசார், தம்பதியினரிடம் விசாரித்தனர். அப்போது, ஆண் குழந்தையை, 30 ஆயிரம் ரூபாய், பெண் குழந்தையை, 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது.டி.எஸ்.பி., மகேஸ்வரன் கூறுகையில்,''குழந்தைகளின் பெற்றோர் ராபின் - மோனிஷா, புரோக்கர்களாக செயல்பட்ட காந்தள் பகுதியை சேர்ந்த, டாக்சி டிரைவர்கள் கமல், 30, பரூக்,35, குழந்தைகளை தத்தெடுத்த திருப்பூரை சேர்ந்த முகமது பரூக், 51, சேலத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி,37, ஆகிய ஆறு பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்,'' என்றார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் பிரபு கூறுகையில்,''மீட்கப்பட்ட குழந்தைகளில் 3 மாத ஆண் குழந்தை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவிலும், 3 வயது ஆண், 2 வயது பெண் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திலும் பராமரிக்கப்படுகின்றனர்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-202105:55:42 IST Report Abuse
பிரகாஷ் நல்ல வேளை அந்த பெண் குழந்தையின் நல்ல காலம், பாதுகாப்பாக மீட்கப் பட்டு விட்டார். இல்லையெனில் அவர் எதிர்காலம் என்ன ஆகி இருக்குமோ. என்ன நோக்கத்திற்காக 51 வயதானவன்2 வயது பெண் குழந்தையை வாங்கினார் என்று யாருக்குத் தெரியும்?
Rate this:
Cancel
30-ஜூலை-202119:03:03 IST Report Abuse
அப்புசாமி மீட்ட குழந்தைகளுக்கு இவிங்க ராஜ போக வாழ்க்கை குடுக்கப் போறாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X