கூவம் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் | சென்னை செய்திகள் | Dinamalar
கூவம் கரையோரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
01:15

சென்னை : சென்னையில், கூவம் கரையோரத்தில் 93 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.



சென்னையில், கூவம், அடையாறு ஆற்றின் கரையோரங்களில், 15 ஆயிரத்து 300 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில், கூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 93 குடிசை வீடுகளை, மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையினர் அகற்றி வருகின்றனர். அகற்றப்பட்டவர்கள், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, கூவம் கரையோரத்தில் இருந்த, 12 ஆயிரத்து 395 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும், 2,905 ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டியுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X