கொரோனா சிகிச்சை வசதி பெற... நிம்மதி! கூடுதல் காப்பீடு பதிவு மையம்: 2 இடத்தில் அமைக்க கலெக்டர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

31 ஜூலை
2021
05:13
பதிவு செய்த நாள்
ஜூலை 31,2021 05:11

திருப்பூர்:காப்பீடு திட்டத்தில், கொரோனா சிகிச்சை பெற வசதியாக, தற்காலிகமாக கூடுதல் பதிவு மையங்கள் அமைக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம், மத்திய அரசின் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.கொரோனா சிகிச்சையும், இதில் பெறலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


அதன்படி, தனியார் மருத்துவமனைகளிலும், காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுவரை கண்டுகொள்ளாத மக்களும், காப்பீடு திட்டத்தில் இணைந்து, அடையாள அட்டை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டம் தோறும், கலெக்டர் அலுவலகத்தில், காப்பீடு திட்ட பதிவு முகாம் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதாக, சான்று பெற்று வந்து, காப்பீடு திட்டத்தில் இணைகின்றனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகம் வந்து, காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதால், கூட்டம் களைகட்டிவிடுகிறது.


கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாலும், மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையிலும், கூடுதல் பதிவு மையம் அமைக்க, மக்கள் வலியுறுத்தி வந்தனர். கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் வினீத், கொரோனா சிகிச்சை பெற வசதியாக, கூடுதலாக, தற்காலிக பதிவு மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.


வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:கலெக்டர் அலுவலகத்தில் மட்டும், காப்பீடு திட்ட பதிவு முகாம் நடந்து வருகிறது. மக்களின் சிரமத்தை குறைக்க, திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகம் மற்றும் தாராபுரம் தாலுகா அலுவலக வளாகம் ஆகிய இரண்டு இடங்களில், தற்காலிக முகாம் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு, கூடுதல் காப்பீடு மையங்கள் இயங்கும். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையம் நிரந்தரமாக இயங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X