ஆக., 3ல் ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஆக., 3ல் ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
05:26

கோவை:ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தசிறப்பு கூட்டம் நடந்தது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஐந்து நாள் பயணமாக வரும் ஆக., 2ல் தமிழகம் வருகிறார். 3ம் தேதி தனி விமானத்தில் சூலுார் விமானப்படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் ஊட்டி செல்லும் ஜனாதிபதி, ராஜ்பவனில் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்கிறார். ஆக., 4ல் குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லுாரியை பார்வையிடுகிறார். 6ம் தேதி ஹெலிகாப்டரில் ஊட்டியில் இருந்து புறப்பட்டு, சூலுார் விமானப்படைத்தளம் வருகிறார். அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.ஜனாதிபதியின்கோவை வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சூலுார் விமானப்படை தளத்தில்,பாதுகாப்பு நடவடிக்கை குறித்த சிறப்புக் கூட்டம் நடந்தது.சென்னை பாதுகாப்பு படை தனிப்பிரிவு எஸ்.பி., சாமிநாதன் தலைமை வகித்தார். மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர், ஊட்டி எஸ்.பி., ஆசிஷ் ராவத், கோவை மாநகர சட்டம், ஒழுங்கு துணை கமிஷனர் ஜெயசந்திரன் உட்பட,அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X