ஓய்வூதியம் இல்லாமல் மருந்து வாங்க முடியலை! தமிழக முதல்வருக்கு ஓய்வூதியர்கள் நம்பிக்கை கடிதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
05:26

கோவை;முடக்கப்பட்ட பஞ்சப்படிக்கு ஆக., 15ம் தேதி வாக்குறுதியின்படி சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக முதல்வருக்கு, போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள், கடிதம் எழுதியுள்ளனர்.அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஓய்வூதியம் தாமதம், பஞ்சப்படி, நிலுவை தொகை உள்ளிட்ட காரணங்களுக்காக, கோவையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதை காணமுடிந்தது.தற்போது, ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி, ஆக., 15ம் தேதி பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்த ஓய்வூதியர்கள் காத்திருக்கின்றனர்.அந்த வகையில், போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கங்களின் பேரவை பொதுச்செயலாளர் ராஜாராம், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'கடந்த, 10 ஆண்டு காலம் ஓய்வுகால பணப்பலன்களை பெறமுடியாது. கோர்ட் நடவடிக்கைகள் வாயிலாக இழுத்தடிக்கப்பட்டு போராடி பெற முடிந்தது.பணியில் இருக்கும் போது வழங்கிய பஞ்சப்படியை, ஓய்வு பெற்றதும் குறைத்து வழங்குவது எந்த அரசுத்துறையிலும் இல்லை. ஆறு ஆண்டுகளாக பஞ்சப்படி உயர்வுமின்றி எங்களை வஞ்சித்ததோடு, பணியில் இருந்தபோது நடைமுறையில் இருந்த, மருத்துவக் காப்பீட்டு திட்டமும் ஓய்வு பெற்ற பிறகு நிறுத்தப்பட்டது.குறைந்த ஓய்வூதியத்துடன், இப்பேரிடர் காலத்தில் முறையான மருத்துவ வசதி இல்லாமல், ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இறந்து விட்டனர்.தங்களது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சி அமைந்தபின், 100 நாட்களுக்குள் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், ஓய்வூதியர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்பது, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி, ஆக., 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, முடக்கப்பட்ட எங்களது பஞ்சப்படிக்கும் சுதந்திரம் கிடைத்து, ஓய்வூதியர்கள் எஞ்சிய நாட்களில் நலமுடன் வாழ, மருத்துவக் காப்பீடும் வழங்குவீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் உள்ளோம்' என, தெரிவித்துள்ளார்.ஓய்வூதிய பணப்பலன்கள் பெறாமலே பலர் உயிரிழந்துள்ளனர். மருந்து வாங்கக்கூட ஓய்வூதியத்தை எதிர்பார்த்தும், பிறரிடம் கடன் வாங்கும் நிலையுள்ள இவர்களுக்கு, விரைவில் விடியல் பிறக்க வேண்டும் என்பது, அனைவரது எதிர்பார்ப்பு.ஆறு ஆண்டுகளாக பஞ்சப்படி உயர்வுமின்றி எங்களை வஞ்சித்ததோடு, பணியில் இருந்தபோது நடைமுறையில் இருந்த, மருத்துவக் காப்பீட்டு திட்டமும் ஓய்வு பெற்ற பிறகு நிறுத்தப்பட்டது.குறைந்த ஓய்வூதியத்துடன், இப்பேரிடர் காலத்தில் முறையான மருத்துவ வசதி இல்லாமல், ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் இறந்து விட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X