போலீஸ் டைரி : வாலிபர் தற்கொலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
போலீஸ் டைரி : வாலிபர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
05:57

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் பிரதீபன், 22. இவர், திருப்பூர், காந்தி நகரில் தங்கி ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்த அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து, அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.பைக் திருடியவர் கைதுதிருப்பூர், குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் மகாவிஷ்ணு, 32. பி.என்., ரோட்டில் தையல் மெஷின் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார்.


கடந்த, 29ம் தேதி அவர் கடை முன் நிறுத்தியிருந்த அவரது பைக் திருட்டு போனது. புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பைக் திருடிய தேனியை சேர்ந்த பாண்டீஸ்வரன், 33 கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.நீரில் மூழ்கி சிறுவன் பலிதிருப்பூர், நல்லுார் அருகேயுள்ள விஜயாபுரம் - மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தினகரன். பிரின்டிங் நிறுவன தொழிலாளி. அவர் மகன் சரண், 13. விஜயாபுரம் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் சரண் அப்பகுதியில் உள்ள பாறைக்குழியில் தேங்கியுள்ள நீரில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத நிலையில், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாலிபருக்கு 'குண்டாஸ்'திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2-ம் தேதி கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணாநகர் முதல் வீதியை சேர்ந்த சதீஷ், 24, என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கு, குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் வனிதா, உத்தரவிட்டார். இவர் மீது திருட்டு, கூட்டுக் கொள்ளை, கொலை, உட்பட 7 வழக்குகள் உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X