கஞ்சா விற்பனை; நால்வர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கஞ்சா விற்பனை; நால்வர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
06:17

மேட்டுப்பாளையம்:கோவை எஸ்.பி., செல்வரத்தினம் உத்தரவின் பேரில், சிறப்புபடை எஸ்.ஐ., திலக் உட்பட போலீசார், மேட்டுப்பாளையம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது மகாதேவபுரம் கிருஷ்ணசாமி லே அவுட்டில் கஞ்சா விற்ப னையில் ஈடுபட்டிருந்த, தீபக்ராஜ், 25, எஸ்.எம்., நகரை சேர்ந்த முகமது பிலால், 26, சங்கர் நகரைச் சேர்ந்த தீனதயாளன், 22 ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.* விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 35. விருதுநகர் பகுதிகளில், 15 அடிதடி வழக்குகள், 6 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். வரும்போது கஞ்சாவை வாங்கி வந்து, பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில், உப்புபள்ளம் பகுதியில் விற்பனை செய்ய முயன்றுள்ளார்.தகவலறிந்த மேட்டுப்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம், தனி பிரிவு போலீசார் ராஜேஷ் ஆகியோர் அங்கு சென்று, 4 கிலோ கஞ்சா, இரண்டு பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X