பஸ் ஸ்டாப் பகுதியில் 'குடி'மகன்கள் ஆதிக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பஸ் ஸ்டாப் பகுதியில் 'குடி'மகன்கள் ஆதிக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
06:46

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, மீன்கரை ரோட்டில் இருந்து, குஞ்சிபாளையம் செல்லும் வழியில், ரயில்வே கேட்டுக்கு முன்பாக டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு, அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து 'குடி'மகன்கள் வந்து போதையேற்றிச் செல்கின்றனர்.போதை தலைக்கேறிய சிலர், ரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போடுவதும், பிரதான ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்கூரையை ஆக்கிரமித்து, ஆபாசமாக பேசுவதும் அதிகரித்துள்ளது.இதனால், அப்பகுதியில் பெண்கள் நடமாடவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் அப்பகுதியில் தினமும் மாலையில் ரோந்து சென்று, 'குடி'மகன்கள் அட்டகாசத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X