வாரிய அட்டை புதுப்பிக்க முகாம் நடத்த கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வாரிய அட்டை புதுப்பிக்க முகாம் நடத்த கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
06:50

வால்பாறை:கட்டட தொழிலாளர்கள் பதிவு செய்யும் வகையில், வால்பாறை நகரில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.வால்பாறை ஏ.ஐ.டி.யு.சி., கட்டட தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சங்கத்தின் தாலுகா தலைவராக பெரியசாமி, செயலாளராக சண்முகம், கவுரவ தலைவர் ஜோஸ், சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதே போல், வால்பாறை நகர் வட்டார தலைவராக ராஜமூர்த்தி, செயலாளராக ராஜமாணிக்கம், பொருளாளராக சுப்ரமணியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிர்வாகிகள் கூட்டத்தில், 'வால்பாறையில் கடந்த பத்து ஆண்டுகளாக பதிவு செய்துள்ளவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை. கட்டட தொழிலாளர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும்.கட்டட தொழிலாளர்கள் நலவாரிய அட்டையை மீண்டும் புதுப்பிக்கும் வகையில், இங்கு சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்,' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X