வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் புதிய திட்டம்: சென்னையில் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

31 ஜூலை
2021
15:41
பதிவு செய்த நாள்
ஜூலை 31,2021 15:38

சென்னை: கோவிட் ஊரடங்கு காலத்தில் சாலையில் வசிக்கும் வீடற்றவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அப்பகுதியில் சென்று வரும் சாமானியர்களே உதவுவர். ஊரடங்கால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டதால், இவர்களும் ஒரு வேளை உணவுக்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.



இந்நிலையில், வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மருத்துவச் சிகிச்சை அளிக்கும், 'அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையம்' என்ற திட்டத்தைச் சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. திட்டத்தை கடந்த 29ம் தேதி, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தால் சென்னையில் உள்ள 400க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்களும் 1,800க்கும் மேற்பட்ட வீடற்றவர்களும் பயனடைவர்.




முதற்கட்டமாக இத்திட்டத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களை மீட்க ஆறு வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தில் இதுவரை 35 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு தண்டையார் பேட்டை மருத்துவமனையில் உள்ள மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் எட்டு பேர் மையத்திலிருந்து தப்பியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மையத்தில் உள்ளவர்களுக்கு மனநல மதிப்பீடு மற்றும் கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.


மீட்கப்பட்டவர்களில் 22 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அவர்கள் மீட்பு மையத்தில் தங்கவைக்கப்படுவர். மீதமுள்ள 5 பேர் விடுதிக்கு அனுப்பப்பட உள்ளனர்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-202119:50:20 IST Report Abuse
அப்புசாமி ... அனைவருக்கும் வூடு திட்டத்தில் எல்லோருக்கும் வூடு குடுத்துக்குட்டே வர்ராரு.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
31-ஜூலை-202118:54:00 IST Report Abuse
தமிழவேல் நல்ல திட்டம். உண்டு உறங்கும் இடமாக மட்டும் இல்லாமல், மறுவாழ்வு தருவதாக இருக்க வேண்டும். அவர்களை நல்ல, சரியான வகையில் ஈடு படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
31-ஜூலை-202118:26:14 IST Report Abuse
Vena Suna நல்ல செயல். வாழ்த்துக்கள். அந்த தொலைபேசி எண் கொடுக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X