அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை | நாமக்கல் செய்திகள் | Dinamalar
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
18:55

எலச்சிபாளையம்: இலுப்புலி அரசுப்பள்ளிக்கு, சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அரசு நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், கணினி, அலுவலக கோப்பு, தளவாடப்பொருட்கள், விளையாட்டு பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X