இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க கடன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
22:47

கடலுார் : படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க வங்கிகளில் கடன் பெற்று பயனடையலாம் என கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க தமிழக அரசால் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.



இத்திட்டத்தில் 2021-22ம் ஆண்டிற்கு கடலுார் மாவட்டத்திற்கு 320 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடி மானியமாக இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் பெற 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சம் பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர், பெண்கள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் பெண்கள் , சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.



உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ. 15 லட்சம், சேவை மற்றும் வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு ரூ. 5 லட்சம் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இதில் திட்ட அறிக்கையில் 10 சதவீதம் தொகையை பொதுப் பிரிவினர் விளிம்புத் தொகையாக செலுத்தவேண்டும். தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 சதவீதம் விளிம்புத் தொகை செலுத்தினால் போதுமானது. இத்திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ. 2.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.



லாபகரமான அனைத்து விதமான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு (நேரடி விவசாயம் தவிர) கடன் வழங்கப்படுகிறது. இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www.meme.online.tn.gov.in/uvegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கொரோனா காரணமாக நேர்முகத் தேர்வின்றி தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X