இளநிலை பட்டப்படிப்பில் சேர அரசுக் கல்லூரியில் அழைப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
இளநிலை பட்டப்படிப்பில் சேர அரசுக் கல்லூரியில் அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
23:06

கடலுார் : கடலுார் அரசு கல்லுாரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கல்லுாரி முதல்வர் உலகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலுார் அரசு கல்லுாரியில் 2021-22ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு சேர விரும்பும் மாணவ, மாணவியர் களுக்கு WWW.tngasa.in, WWW.tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப பதிவு கடந்த 26ம் தேதி துவங்கியது. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லுாரி உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் இந்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.



விண்ணப்பக் கட்டணம் ரூ. 48. பதிவுக் கட்டணம் ரூ. 2. எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 ஆகும். விண்ணப்பிக்க வரும் 10ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X