பருவமழை முன்னெச்சரிக்கை | கடலூர் செய்திகள் | Dinamalar
பருவமழை முன்னெச்சரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
23:08

கடலுார் : கடலுாரில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.



தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் தொடர்பாக தீயணைப்பு, போலீஸ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவித்துள்ளது. கடலுாரில் செயிண்ட் ஜோசப் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தன்னார்வலர்கள் சார்பில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது. கடலுார் டவுன் ஹாலில் கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.



எஸ்.பி., சக்திகணேசன், கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித் சிங், பவன்குமார் ஜி.கிரியப்பனவர், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X