'சைமா' - பவர்டேபிள் சங்கத்தினர் பேச்சு: நாளை! வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 ஆக
2021
02:00
பதிவு செய்த நாள்
ஜூலை 31,2021 23:40

திருப்பூர்:கட்டண உயர்வு பேச்சு நடத்த, பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்துக்கு, 'சைமா' அழைப்பு விடுத்துள்ளது.



திருப்பூர் பவர்டேபிள் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு வழங்குவதற்காக, கடந்த 2016 ல் போடப்பட்ட ஒப்பந்தம், 2020, அக்டோபரில் காலாவதியானது ஜாப்ஒர்க் கட்டணத்தை உயர்த்தி வழங்கவேண்டும்; புதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென பவர்டேபிள் சங்கம், 'சைமா'வை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால், ஒப்பந்த பேச்சுக்கு, அழைக்காததால், கடந்த 28ம் தேதி முதல், பவர்டேபிள் துறையினர், உற்பத்தி நிறுத்தி, போராடி வருகின்றனர்.



சில பெரிய உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தயாரிப்பு முடிந்து பவர்டேபிள் நிறுவனங்களில் தேங்கியுள்ள ஆடைகளை, அனுப்ப கோருகின்றனர்.பவர்டேபிள் நிறுவனங்களும், ஆடைகளை வாகனங்களில் ஏற்றி, அனுப்புகின்றன. வாகனங்கள் மறிப்புநேற்று அவற்றை அங்கேரிபாளையம், வேலம்பாளையம், கொடியம்பாளையம் பிரிவு பகுதிகளில், பவர்டேபிள் நிறுவனத்தினர் சிலர் வழிமறித்து, நிறுவனத்துக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், வாகன டிரைவர் - பவர்டேபிள் நிறுவனத்தினர் மற்றும் பவர்டேபிள் உற்பத்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றன.


இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்ட தொழிலாளர் நலத்துறை (சமரசம்), நாளை (2 ம் தேதி) மதியம், 3:00 மணிக்கு, பேச்சுவார்த்தை நடத்த, 'சைமா' மற்றும் பவர்டேபிள் சங்கங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சைமா சங்க நிர்வாக குழு, நேற்று கூடியது. தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



வழிமறித்தல் சரியல்ல'



சைமா' தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆடை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, பவர்டேபிள் உரிமையாளர்கள் வழிமறிப்பது சரியல்ல; இதுகுறித்து, அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழிலாளர் துறை, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. 'சைமா' நிர்வாக குழுவில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, வரும் 2ம் தேதி, மதியம், கட்டண உயர்வு ஒப்பந்த பேச்சு நடத்த, பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.


'கட்டாயம் வேண்டாமே'


பவர்டேபிள் உரிமையாளர் சங்க துணை செயலாளர் முருகேசன் கூறுகையில், 'சில ஆடை உற்பத்தியாளர்கள், பவர்டேபிள் நிறுவனத்தினரை, அதிகாலை நேரம் ஆடைகளை அனுப்பிவைக்க கட்டாயப்படுத்துகின்றனர். போராட்டம் நடப்பதால், சக பவர்டேபிள் துறையினர், வாகனங்களை தடுக்கின்றனர். 'சைமா' சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X