ரூ.1.18 கோடி மதிப்பு பொருட்கள் உரிய நபர்களிடம் ஒப்படைப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
ரூ.1.18 கோடி மதிப்பு பொருட்கள் உரிய நபர்களிடம் ஒப்படைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
23:59

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் நடந்த திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட, 55 சவரன் நகைகள், புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து எஸ்.பி., சுதாகர் கூறியதாவது:


காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் நடந்த திருட்டு, வழிப்பறிகளில்சம்பந்தப்பட்ட, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து, 10 இரு சக்கர வாகனங்கள், ஒரு 'ஆடி' கார், 55 சவரன் நகைகள், 2.2 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு, 1.18 கோடி ரூபாய். இவை, புகார் கொடுத்த நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.


மேலும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 109 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை, 35 பேர் குண்டாசில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், திருந்தி வாழ நினைத்த 246 பேருக்கு நன்னடத்தை பிணை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X