வாகனங்கள் நிறுத்த வசதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
00:54

திருப்பூரில் இருந்து கனரக வாகனங்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்ல வசதியாக அவிநாசி பாளையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை, 71 கி.மீ., நீளம் உள்ள ரோடு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க, எரகாம்பட்டி, கவுண்டம்புதூர் ஆகிய இடங்களில் பார்க்கிங், தண்ணீர், கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. கனரக வாகன ஓட்டிகளுக்கு தரமான பார்க்கிங் வசதி இருப்பதால் மன உளைச்சல் குறையும். தேவையான நேரம் ஓய்வெடுக்க இது உதவியாக இருக்கும்.---ரேஷன் பொருளுக்கு 'தவம்'பல்லடம் அருகே இச்சிப்பட்டி தேவராயம்பாளையம் ரேஷன் கடையில், 'நெட்வொர்க்' பிரச்னை காரணமாக, உரிய நேரத்தில் பொருட்கள் பெற்று செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'புறநகர் பகுதி என்பதால், இப்பகுதியில் 'நெட்வொர்க்' பிரச்னை அதிகம் உள்ளது. விற்பனையாளர் ஒவ்வொரு முறையும் கருவியை 'ஆப்' செய்துவிட்டு மீண்டும் 'ரீஸ்டார்ட்' கொடுக்கிறார். இதற்கு, 15 நிமிடங்கள் ஆனாலும், அதன்பின், மீண்டும் அதேபோல் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்துவதுடன், அதுவரை தற்காலிக நடவடிக்கை மூலம், ரேஷன் பொருட்கள் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.---'குட்கா' விற்றால் நடவடிக்கைபெருமாநல்லுார், குன்னத்துார் போலீசார் புகையிலை பொருட்களை விற்கக்கூடாது என வியாபாரிகளிடம் வலியுறுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பெருமாநல்லுாரில் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், சரஸ்வதி பேசுகையில், ''புகையிலை பொருள்களால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு அரசு விற்பனை செய்ய தடை விதித்து உள்ளது. மீறி விற்றால், அபராதம் விதிப்பு, கடைக்கு சீல் வைப்பது, விற்பனை செய்வோர் கைது செய்து சிறையில் அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, புகையிலை பொருட்களை விற்கக்கூடாது. மீறி விற்றால், கடும் நடவடிக்கை பாயும்'' என்றனர்.---பி.எம்.எஸ்., துவக்க தினம்திருப்பூர் மாவட்ட பாரதீய மஸ்துார் சங்கம் (பி.எம்.எஸ்.,) சார்பில், பி.எம்.எஸ்., சங்க துவக்க தினம் உடுமலை, காங்கயம், திருப்பூர் வடக்கு, தெற்கு உட்பட, 21 இடங்களில் மாவட்ட முழுவதும் கொண்டாடப்பட்டது. இவற்றில், மாநில போக்குவரத்து சங்க தலைவர் சிதம்பரசாமி, துணை தலைவர் சந்தான கிருஷ்ணன், மாவட்ட தலைவர் பிரபு, செயலாளர் மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பி.எம்.எஸ்., நிறுவனர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.------ஏவுகணை நாயகனுக்கு அஞ்சலி (படம்)திருப்பூர் ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளையின் சார்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின், ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி திருப்பூர் குமரன் சிலை அருகில் அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அவரின் உருவப்படத்துக்கு, மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செய்யப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் பூபதி தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவி, வடக்கு இன்ஸ்பெக்டர் கணேசன், அம்மன் ஜூவல்லர்ஸ் செந்தில்குமார், அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மரக்கன்று வளர்த்து, பசுமையை பேணிக்காப்போம் என உறதிமொழி ஏற்கப்பட்டது.---மதுக்கடை அகற்ற மனுதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், இந்திய குடியரசு கட்சி பொருளாளர் ஆனந்தன் அளித்த மனுவில், 'திருப்பூர், மங்கலம் ரோடு, கே.வி.ஆர்., நகரில் இயங்கி வரும் 'டாஸ்மாக்' மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மதுக்கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பல போராட்டம் நடத்தினோம். அப்போது, மக்களிடம் உறுதி கூறிய அதிகாரிகள், 'கடை காலி செய்யப்படும்,' என தெரிவித்தனர். ஆனால், கடை தொடர்ந்து, 24 மணி நேரமும் செயல்பட்டு, பெண்களுக்கும், மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, மதுக்கடையை உடனடியாக கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறியுள்ளார்.---கால்நடை சந்தை திறக்க... (படம்)திருப்பூர் கால்நடை வியாபாரிகள் சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்த மனுவில், 'தென்னம்பாளையத்தில், 60 ஆண்டுகளாக தொடர்ந்து கால்நடை சந்தை நடந்து வந்தது. கொரோனா தொற்று காரணமான சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டது. பிற ஊர்களில் சந்தை இயங்க அனுமதி வழங்கப்பட்டு, சில நாட்களாக செயல்பட்டும் வருகிறது. கால்நடை சந்தை திறக்காததால், எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சந்தை திறக்க அனுமதி வழங்க வேண்டும். தென்னம்பாளையத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், தற்காலிகமாக மாற்று இடத்தில் சந்தை கூட அனுமதி வழங்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X