கோடியில் ஒருவனாகு, இளைஞனே! ஒலிம்பிக் பதக்க கனவு, நம்ம ஊருக்கும் உண்டு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கோடியில் ஒருவனாகு, இளைஞனே! ஒலிம்பிக் பதக்க கனவு, நம்ம ஊருக்கும் உண்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:26

தொற்று தணிந்திருந்தாலும், அடுத்த அலைக்கான அச்சம் தொடர்கிறது; டோக்கியோ ஒலிம்பிக், தொற்றுக்கிடையே சவாலை தாங்கி நடக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.ஒலிம்பிக்கில், இன்று உள்ள சாதனை, நாளை சாதனையற்றதாக மாறிவிடும். எனவே சாதனைகளை மேலும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும், திறனை உலகறிய செய்ய வேண்டும் என்பதும்தான், ஒலிம்பிக்கிற்கு செல்லும் வீரர்களின் கனவாக இருக்கிறது.வெற்றி, தோல்வி, இலக்கு அனைத்தையும் விட, ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் புதிய சாதனையைப் புரிய வேண்டும் என்ற ஆர்வத்துக்கு, நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள்தான் உந்துசக்தி.கவனத்தைஈர்த்த ஒலிம்பிக்கடந்த காலங்களில் இல்லாத அளவு, இந்த முறை அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள், சிறுவர், சிறுமிகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகளை ரசிப்பதற்கான நேரம் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. திருப்பூர் இளைஞர்கள்,இதுபோன்ற உலகளாவிய சாதனைக்காக தங்களைச் செதுக்கிக்கொள்ள வேண்டும் என்ற மனத்திறனைப் பெறுவதற்கான வரப்பிரசாதமாக இதைக் கருத வேண்டும்.பல விளையாட்டு வீரர்களும், ஏதோ ஒரு சாதனையாளரால் ஈர்க்கப்பட்டு, லட்சிய வெறியுடன், களத்தில் குதித்து, உழைத்து, சாதனைகளைப் படைத்தவர்கள்தான்.மீராபாயின் சாதனைஇந்தியா, களம் கண்ட முதல் நாளிலேயே பதக்கத்தை குவித்தது. ஒலிம்பிக் போட்டியில் இதுவரை முதல் நாளில் இந்தியா பதக்கம் பெற்றதில்லை; ஆனால், பளு துாக்குதலில், மீராபாய் சானு, இதை சாதித்திருக்கிறார்.அதேசமயம், மேரிகோம் போன்ற வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற இயலாமல் போனது; வெற்றி, தோல்வி இல்லாமல், விளையாட்டு இல்லை.தருண் அய்யாசாமி போன்ற திருப்பூர் மாவட்ட இளைஞர்கள், அடுத்த ஒலிம்பிக்கிற்காக காத்திருக்கிறார்கள்; அடுத்த முறை, இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்கள் பட்டியலில், திருப்பூர் வீரர்கள் பலரும் இடம்பெற வேண்டும். அதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சி, முன்பே துவங்கப்பட்டிருக்க வேண்டும். பல கோடி பேரில் ஒருவராக, திருப்பூர் இளைஞர்கள் ஏன் இருக்கக்கூடாது, திறமையும், முயற்சியும் தொடர்ந்தால்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X