பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய கோரிக்கை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:31

கோவை:பஞ்சாலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய, கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம், தலைவர் ராஜாமணி தலைமையில் நடந்தது. பீளமேடு சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், 'தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின்(இ.எஸ்.ஐ.சி.,) கோவை மண்டலத்துடன் உள்ள திருப்பூர் மாவட்டத்தை, சேலத்துடன் இணைப்பதாக அரசு அறிவித்துள்ளது.திருப்பூரில் இருந்து கோவையை காட்டிலும், சேலத்துக்கு, 200 கி.மீ., வரை தொழிலாளர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், சம்பள இழப்பு, போக்குவரத்து செலவு, அலைச்சல் ஏற்படும். எனவே, சேலத்துடன் இணைக்கும் முயற்சியை கைவிட்டு, கோவை மண்டலத்திலேயே திருப்பூர் தொடர வேண்டும்.தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.நாட்டின் நுால் உற்பத்தியில், 45 சதவீதம் தமிழகத்தில் பங்கு இருந்து வருகிறது.ஜவுளித்துறையில் பணிபுரிந்துவரும் தொழிலாளர்களுக்கு, அடிப்படை வாழ்வாதாரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை.எனவே, பஞ்சாலை தொழிலாளர்களுக்கு(வேலை பழகுனர் தவிர), குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கென முத்தரப்பு குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.சங்கபொதுச்செயலாளர்(பொ) மனோகரன், பொருளாளர் சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X